பாகிஸ்தான் வேண்டவே வேண்டாம்.. தொழிற்சாலையை மூடிவிட்டு ஓடும் பிரபல நிறுவனம்! ஷாம்புக்கு தட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் பிரபல நிறுவனமான பிராக்டர் மற்றும் கேம்பிள் (Procter and Gamble) அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனால் Head & Shoulders ஷாம்பு மற்றும் Gillette உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் கையேந்தி கடன் கேட்டு வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானில் இருந்து அடுத்தடுத்து பெரிய பெரிய நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

procter-and-gamble-shutting-their-plant-in-pakistan-shampoo-and-gillette-shortage-started

அந்த வகையில் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Procter and Gamble (P&G) என்ற நிறுவனம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 1991ம் ஆண்டில் பாகிஸ்தானில் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக மாறியது. இந்த நிறுவனம் ப்ராக்டர் மற்றும் கேம்பிள் நிறுவனம் ஸ்கின்கேர், கிளினிங் பொருட்கள், டயட்டுக்கான பொருட்களை வழங்கி வருகிறது. மலிவு விலையில் பல பொருட்களை விற்பனை செய்தது தான் இதற்கு முக்கிய காரணம்.

ப்ராக்டர் மற்றும் கேம்பிள் நிறுவனத்தின் ஹெட் & ஷோல்டர்ஸ், பான்டீன், டைட், ஓரல்-பி, ஜில்லெட், ஓல்ட் ஸ்பைஸ், ஏரியல், பாம்பர்ஸ் போன்ற பொருட்களை பாகிஸ்தானியர்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர். குறிப்பாக, ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் ஷாம்பு , பேன்டீன் (Panteen) உள்ளிட்டவை இந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதேபோல் முகத்தை சவரம் செய்ய பயன்படும் ஜில்லெட் (Gillette), ஹெல்த்கேரை எடுத்து கொண்டால் ஓரல் நபி, பிஸ்மால், விக்ஸ் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனை பாகிஸ்தானியர்கள் அதிகம் பயன்படுத்தினர்.

இந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தானின் கராச்சி மற்றும் பலுசிஸ்தானில் ஆலைகள் இயங்கி வந்தன. தற்போது பாகிஸ்தானில் தொடர்ந்து உள்நாட்டு பிரச்சனைகள் வெடித்து வருகிறது. அதேபோல் நாட்டின் நிதி நிலைமை தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. மேலும் சீனாவில் இருந்து பல பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த நிறுவனம் இருஆலைகளையும் மூடிவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானில் வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்பை இன்னும் அதிகரிக்க உள்ளது.

மேலும் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் ஷாம்பு, ஜில்லெட் ரேஸர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சோம்பு, ஸ்கின்கேர் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. லாகூரை சேர்ந்த நதீம் கான் என்பவர், ‛‛ப்ராக்டர் மற்றும் கேம்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தானில் வாழும் 24 கோடி மக்களுக்கு சோப்பு, ஷாம்பு தேவையாக உள்ளது. நிறுவனத்தை மூடாதீர்கள்'' என்று கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஜாவேத் இக்பால் என்பவர் கூறுகையில், ‛‛ கடந்த மூன்று மாதங்களாக எனக்கு ஜில்லெட் ரேஸர் கிடைக்கவில்லை. நான் எப்போதும் ஷேவிங்கிற்கு ஜில்லெட் ப்ளூ 3 ரேஸரை தான் பயன்படுத்துகிறேன். ஆனால் கடந்த 3 மாதங்களாக கிடைக்கில்லை. அதற்கு பதிலாக ட்ரீட் தயாரிப்பை பயன்படுத்துகிறேன். அது மோசமாக இருக்கிறது'' என்று புலம்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+