பொது வாழ்க்கையில் சகாப்தம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கடம்.. மண்டேலாவின் கதை!
ஜோஹன்னஸ்பர்க்: பொது வாழ்க்கையில் சகாப்தமாக திகழ்ந்த நெல்சன் மண்டேலா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சங்கடங்களைத்தான் சந்தித்தார் என்பது சோகமானது.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் அவர் தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருந்தார். அதில் 25 வருடங்கள் சிறையிலேயே கழிந்து போனது.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தோஷத்தை விட சங்கடங்களையும், சர்ச்சைகளையும், வேதனைகளையும்தான் அதிகம் சந்தித்துள்ளார்.

கொள்ளுப்பேத்தியின் அகால மரணம்
கடந்த 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில் அவரது கொள்ளுப்பேத்தி கார் விபத்தில் பலியானதால் அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு வந்து விட்டது.

13 வயதேயான ஜெனானி மண்டேலா
மணடேலாவின் செல்லமான கொள்ளுப்பேத்திதான் 13 வயதான ஜெனானி மண்டேலா. அவரது மரணம் மண்டேலாவை சிதறடித்து விட்டது.

9 மாதத்தில் மரணித்த முதல் மகள்
அதேபோல மண்டேலாவின் முதல் மனைவி எவர்லின் டோகோ மாசேவுக்கும், மண்டேலாவுக்கும் பிறந்த முதல் மளான மெகாஸிவி பிறந்து 9 மாதமே ஆகியிருந்த நிலையில் உயிரிழந்தார்.

மூத்த மகன் கார் விபத்தில் பலி
அதேபோல மண்டேலாவின் மூத்த மகன் மடிபா தெம்பிகிலே 1969ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். அப்போது மண்டேலா சிறையில் இருந்தார்.

தாயாரின் முகத்தைப் பார்க்க முடியாத துரதிர்ஷ்டம்
அதேபோல மண்டேலா சிறையில் இருந்தபோது அவரது தாயார் மரணமடைந்தார். இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

எய்ட்ஸுக்குப் பலியான இன்னொரு மகன்
அதேபோல மண்டேலாவின் இன்னொரு மகனான மெக்தோ லெவனிகா மண்டேலா, 2005ம் ஆண்டு எய்ட்ஸ் வந்து இறந்தார்.

வின்னியால் வந்த தலைவலி
மண்டேலாவின் இரண்டாவது மனைவியான வி்ன்னி மண்டேலாவும் அவருடன் இறுதி வரை சேர்ந்து வாழவில்லை. இந்த வாழ்க்கையும் கசப்பாகவே முடிந்து போனது மண்டேலாவுக்கு. 1996ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர்.

3வது மனைவி
1998ம் ஆண்டு கிரேக்கா மெச்சலை திருமணம் செய்தார் மண்டேலா. அவரது முதல் கணவர் மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மெச்சல் ஆவார். இந்தத் திருமணமும் கூட சலசலப்பை ஏற்படுத்தியது அப்போது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications