ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது மேற்கு நாடுகள் தான்.. அதிபர் புதின் குற்றச்சாட்டு!
மாஸ்கோ: மேற்கு நாடுகள் ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு தலைநகர் மின்ஸ்கில் நடந்த யூரேசிய பொருளாதார ஒன்றிய உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், "ஐ.எஸ், ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன் மீது கவனம் செலுத்தவில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷ்யாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினார்கள். ரஷ்யாவில் மேற்கு நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன. மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்து வருகின்றன.
சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எவ்வாறு வந்துள்ளோம் என்பது பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாஸ்கோ உடனான புவிசார் அரசியல் போராட்டத்தில் மேற்கு நாடுகள் பயங்கரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன.
நேட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரைன் மோதலைத் தீர்ப்பது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேற்கத்திய நாடுகள் மீண்டும் மீண்டும் ரஷ்யாவுக்கு துரோகம் செய்துள்ளன. பல ஆண்டுகளாக நேட்டோவின் நடவடிக்கைகள் - ரஷ்ய எல்லைகளுக்கு அருகில் அதன் தடத்தை விரிவுபடுத்துவது உட்பட உக்ரைன் நெருக்கடியைத் தூண்டியது" என ரஷ்ய அதிபர் புதின் கடுமையாகச் சாடியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் போரில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications