டிரம்புக்கு செக்! கிழக்கு உக்ரைன் ஒப்படைத்தால்.. போர் நிறுத்தம் பற்றி யோசிக்கலாம்! - ரஷ்யா
மாஸ்கோ: அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு நேட்டோவில் இணைய உக்ரைன் துடித்த நிலையில், அதன் மீது ரஷ்யா போரை நடத்தி வருகிறது. இந்த போர் மூன்று ஆண்டுகளாக தொடரும் நிலையில், கிழக்கு உக்ரைனை விட்டுக்கொடுத்தால் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என ரஷ்ய தரப்பு தற்போது கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டு போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், முதலில் உக்ரைனை மிரட்டி பார்த்தார். ஆனால் அது பெரிய அளவில் வேலைக்கு ஆகவில்லை. இதனையடுத்து தற்போது ரஷ்யா பக்கம் வந்திருக்கிறார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் சந்திக்கவுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில், அமைதி ஒப்பந்தத்திற்கான மத்தியஸ்தராக டிரம்ப் செயல்படவுள்ளார்.
கிழக்கு உக்ரைன்
கிழக்கு உக்ரைனிலிருந்து நேட்டோ படைகளும் உக்ரைனும் விலகிக்கொண்டால், போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக்கொள்வார் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பிய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர, கிழக்கு உக்ரைன் மீது முழு கட்டுப்பாடும் அதற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் ரஷ்யா விரும்புவதாக ஊடகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எந்தெந்த பகுதிகள்?
உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய நான்கு மாகாணங்களை தங்கள் வசம் ரஷ்யா கோருகிறது. இது குறித்து பேசிய டிரம்ப், "எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் நிலப்பரப்பு பரிமாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. சில பகுதிகளை நாம் திரும்பப் பெறுவோம்; சில பகுதிகள் மாற்றப்படும். இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் நிலப்பரப்பு பரிமாற்றங்கள் இருக்கும்" என்று கூறினார். ஆனால் எந்தெந்த பகுதிகள் ரஷ்யாவுக்கு போகும் என்பது குறித்து அவர் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
டிரம்ப் சொன்னது என்ன?
"அதிபர் புதின் அமைதியை விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். ட்ரூத் சோஷியலில் அவர் பதிவிட்டதாவது: "அமெரிக்க அதிபராகிய நானும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சந்திப்பு, அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று, அலாஸ்காவின் மாபெரும் மாநிலத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்"
டிரம்ப்-புடின் சந்திப்பு
2021-ல் அப்போதைய அதிபர் ஜோ பைடன் புதினை ஜெனீவாவில் சந்தித்த பிறகு, இது முதல் அமெரிக்க-ரஷ்ய உச்சிமாநாடாக அமையவுள்ளது. போர் குறித்து புதினிடம் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும், அமைதி ஏற்படுத்துவதற்கு "நமக்கு வாய்ப்பு உள்ளது" என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியானது. அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்த பிறகு, ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரச்சனை என்ன?
ஒரு காலத்தில் உக்ரைன் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. தொன்னூறுகளில் இது தனி நாடாக உருவானது. அதன் பின்னர் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்கள் கைகளுக்கு சென்ற உக்ரைன், ஒரு கட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்றது. அப்படி நடந்தால் உக்ரைன்-ரஷ்யா எல்லையில் அமெரிக்க படைகள் நிற்கும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவேதான் நேட்டோவில் இணைய வேண்டாம் என்று புதின், உக்ரைனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால் அதையெல்லாம் கேட்காத உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதாக அறிவித்தார். இதனால்தான் ரஷ்யா போரை தொடுத்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications