கைய குடு சகல..உங்க புடின் நான் வர்றேன்! ஈரானுக்கு கை கொடுக்கும் ரஷ்யா? ஏக கடுப்பில் டொனால்ட் ட்ரம்ப்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கடந்த சில மாதங்களாகவே மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. மேற்காசியப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீப காலமாக மேற்காசியப் பகுதியில் தொடர்ந்து போர் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரான், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

Putin Iran meeting

இந்த மோதல்கள் காரணமாக மேற்காசியப் பகுதியில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகவும், அதன் பின்னர் பதிலடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்லாமல்,அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்த ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஹார்மூஸ் நீரிணை

இந்த மோதல்களின் தொடர்ச்சியாக, உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்மூஸ் நீரிணை ( Strait of Hormuz ) பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. அந்தப் பாதையில் ஏற்பட்ட தடைகள் காரணமாக உலக நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் உருவாகும் அபாயம் எழுந்தது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது.

மேற்காசியா பதற்றம்

இந்நிலையில், பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக சில நாடுகள் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இரு தரப்பினரும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

புதின் அராக்சி சந்திப்பு

இந்த சூழ்நிலையில், ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மேற்காசியப் பகுதியில் நிலவும் நிலைமைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின் போது, தற்போதைய போரில் தங்களுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருவதற்காக ஈரான் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்கு ஆதரவு

அதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர், மேற்காசியப் பகுதியில் விரைவாக அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயாராக இருப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்தப் பகுதியில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயார் என்ற நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலக நாடுகள் மத்தியில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்

தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால், மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்ற நிலை குறையும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேற்காசியப் பகுதியில் நிலவும் பதற்ற சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+