நாளைக்கு என்ன சொல்லப்போறார் ரஷ்ய அதிபர் புதின்.. உற்று பார்க்கும் இந்தியா! உக்ரைனுடன் போர் நிறுத்தம்
வாஷிங்டன்: உக்ரைன் நாட்டில் நடக்கும் சண்டையை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச இருக்கிறார். செவ்வாய்க்கிழமை இந்த பேச்சு நடக்கவுள்ளது. உக்ரைன் நேட்டோ என்ற ராணுவக் கூட்டணியில் சேரக்கூடாது என்றும், எந்த நாட்டுக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் ரஷ்யா விரும்புகிறது. இதற்கான உறுதியான உத்தரவாதத்தை ரஷ்யா கேட்கிறது.
அமெரிக்கா ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தம் செய்யலாம் என்று கூறியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதற்கு சரி என்று சொல்லிவிட்டார். ஆனால் ரஷ்யாவுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போர் நிறுத்தத்தில் கையெழுத்திட முடியும் என்று புடின் கூறியுள்ளார்.

போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளிடம் அமெரிக்கா சவுதியில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. உக்ரைன் ஒப்புக்கொண்டால் நாங்களும் ஒப்புக்கொள்கிறோம் என்று ரஷ்யா தெளிவாக கூறியிருந்தது. இதனையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் மோதல் எழுந்தது. ஜெலன்ஸ்கி தரப்பு நியாயத்தை கேட்காத டிரம்ப், அவரை திட்டவும் செய்தார். இந்த சலசலப்புகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறது.
ரஷ்யா ஓகே சொல்ல வேண்டியதுதான் பாக்கி. தனது நிலைப்பாட்டை ரஷ்யா நாளை தெரிவிக்கும். டிரம்ப் இது பற்றி புதினிடம் தொலைப்பேசியில் பேசுவார் என்று ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்ட்கொஃப் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதற்காக புதின் என்ன டிமான்ட் வைக்கப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அநேகமாக 30 நாள் போர் நிறுத்தத்தை புதின் முன்வைக்கலாம். அதே நேரம் நேட்டோவில் உக்ரைன் இணைய கூடாது என்றும் சொல்லலாம். உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்ள எல்லா உரிமையையும் பெற்றிருக்கிறது. ஆனால், நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல். ஆகவே நேட்டோவை தவிர்த்துவிட்டு, எதை வேண்டுமானாலும் செய்துக்கொள் என்று புதின் கூறலாம். மற்றொரு முக்கியமான விஷயம், உக்ரைன் நடுநிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஏனெனில் உக்ரைன் ரஷ்யா பக்கம் சாய்ந்துவிடும் என ஐரோப்பிய நாடுகள் அச்சம் தெரிவிக்கின்றன. ஆகவே உக்ரைன் நடுநிலையுடன் இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என்று புதின் கூற வாய்ப்பு இருக்கிறது.
இப்போதுவரை 20% நிலத்தை உக்ரைன் போரில் இழந்திருக்கிறது. இதனை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று டிரம்ப் கறாராக கூறிவிட்டார். இது உக்ரைனுக்கு பின்னடைவு. அதேபோல இரு தரப்பும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் எனில், பல ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ருபியோ கூறியிருக்கிறார்.
இந்த விஷயத்தை வெறுமென உக்ரைன்-ரஷ்யா கோணத்திலிருந்து மட்டும் பார்க்காமல் உலக நாடுகள் பார்வையில் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். புதின் போரை முடிக்க விரும்பவில்லை, ஆனால் இடைக்கால ஒப்பந்தங்களை உருவாக்க விரும்புகிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் உக்ரைனை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டுவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் முடிவுக்கு வருவது இந்தியாவுக்கும் நல்ல விஷயம்தான். ஏனெனில் போரால் இந்தியா-ரஷ்யா வர்த்தகம் பற்றாக்குறையை சந்தித்திருக்கிறது. ரஷ்யாவின் எண்ணெய் சப்ளை திடீரென சார்ட்டேஜ் ஆகிறது. போர் முடிந்தால் இப்பிரச்சனை இருக்காது. இந்தியாவுக்கு மேலும் அதிக வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications