சகோதரனால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டார் 'நிர்வாண சவால்' பாக். மாடல் நடிகை!
முல்தான்: பாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலமுமான குவான்டீல் பலோச், அவரது சொந்த சகோதரனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரின், நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சகோதரனால், குவான்டீல் 'கவுரவ கொலை' செய்யப்பட்டதாக தெரிகிறது.
சோஷியல் மீடியாவான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் எதிர் கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் குவான்டீல். மாடல் நடிகையாகவும் பிரபலமானவர்.

கடந்த வரும் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆனால், இந்தியா அந்த போட்டியில் வென்றதால், பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், முல்தானில் பெற்றோர் வசித்து வருவதால் ரம்ஜான் கொண்டாக அங்கு சென்றிருந்தார் குவான்டீல். நேற்றிரவு அவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சகோதரர் வசீம். இன்று காலைதான் இதுகுறித்து தெரியவந்தது. போலீசார் தலைமறைவாக உள்ள வசீமை தேடி வருகிறார்கள்.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குவான்டீல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று வசீம் பலமுறை எச்சரித்ததாகவும், அதை குவான்டீல் புறம் தள்ளியதால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications