கத்தார் ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பணி : புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்
தோஹா: கத்தார் நாட்டில் ஆண்களுக்கு மூன்று முதல் நான்கு மாத கட்டாய ராணுவப் பணி குறித்தான புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்கப் பட்டுள்ளது.
நான்கு மாதங்கள் ஆண்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுவது குறித்தான வரைவு சட்டத்திற்கு கத்தார் அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகைய சட்டம் இயற்றப்படுவது அந்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளாக இருக்கும் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மூன்று மாத காலமும், பட்டதாரிகள் இல்லையென்றால் அவர்கள் நான்கு மாத காலமும் ராணுவத்தில் பணிபுரிவது என்பது இச்சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒப்புதலுக்காக ஆலோசனைக் கவுன்சிலான மஜ்லிஸ் அல்-சுராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒப்புதல் கிடைத்த பின்னர், இந்த மசோதா சட்டமாக இயற்றப் படும் எனத் தெரிகிறது.
நாட்டின் பாதுகாப்பிற்காக வழக்கமான படைகளோடு கூடுதலாக, அதனை வலுப்படுத்தும் விதத்தில் ஆதரவுப் படை இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், கத்தார் இளைஞர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும்விதமாகவே இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக மற்றொரு அரசு அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications