For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனிக்குட உறையுடன் பிறந்த 'அதிசயக் குழந்தை'... பென்சில்வேனியா தாயின் மறக்க முடியாத பிரசவம்!

பென்சில்வேனியாவில் 11 வாரத்திற்கு முன்னரே பிறந்த குழந்தையொன்று பனிக்குட உறையுடன் பிறந்திருக்கும் புகைப்படத்தை குழந்தையின் தாயார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஹேரிஸ்பர்க் : பென்சில்வேனியாவில் குறை மாதத்தில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று பனிக்குட உறையுடன் காரிலேயே பிறந்த தருணத்தை அந்த தாய் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டு அந்த தருணங்களை விவரித்துள்ளார்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ரேலின் ஸ்கர்ரியின் இரண்டாவது குழந்தைக்கு அக்டோபர் 18ம் தேதி பிரசவ தேதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி ஸ்கர்ரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 11 வாரங்கள் முன்பு வலி ஏற்பட்டதால் இது பிரசவ வலியாக இருக்காது என்று ஸ்கர்ரி தனது கணவருடன் காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் வலி அதிகரிக்கவே, குழந்தை வெளியே வருவதை உணர்ந்த ஸ்கர்ரி தானாகவே கைகளை வைத்து வயிற்றை அழுத்தியுள்ளார், சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதிசயத்தை பாருங்கள் குழந்தை பனிக்குட உறையுடனே பிறந்துள்ளது. தாயின் வயிற்றில் வளரும் கருவை சுற்றி பனிக்குட சவ்வு போர்த்தப்பட்டிருக்கும், அதற்குள் வளரும் குழந்தை பனிக்குடத்தில் இருக்கும் நீர் வெளியேறத் தொடங்கினால் குழந்தை பிரசவத்திற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.

அதிசயக் குழந்தை

ஆனால் பனிக்குட சவ்வுடன் பிறந்த குழந்தையை ஸ்கர்ரி அதிசயக் குழந்தை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தகவலில் கூறியுள்ளார். என்னுடைய பயமெல்லாம் அவன் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பது தான். அதன் பிறகு அவனுடைய முகத்தை தொட்டுப் பார்த்தேன், அவன் தன்னுடைய குட்டிக் கைகளையும், கால்களையும் முகத்தை நோக்கி கொண்டு வந்தான்.

மருத்துவர்கள் நம்பவில்லை

குழந்தை பிறந்தது முதல் மருத்துவமனையை அடைய 7 நிமிடங்கள் ஆனது. முதலில் இந்த சம்பவத்தை மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் நம்பவில்லை, ஏனெனில் என்னுடைய கணவர் அமைதியாக இருந்தார். இதனால் கன் கணவர் மீண்டும் காருக்கு வந்து குழந்தையை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டிய பிறகே அவர்கள் விரைந்து வந்து குழந்தையை எடுத்துச் சென்று, பனிக்குட உறையை அகற்றி மருத்துவ சிகிச்சை அளித்தனர் என்று ஸ்கர்ரி கூறியுள்ளார்.

ஆரோக்கியமாக உள்ள குழந்தை

சிசேரியன் என்று எளிதில் முடிந்துவிடும் வலியில்லா பிரசவங்களுக்கு மத்தியில் காருக்குள்ளே அதுவும் பனிக்குட உறையுடன் பிறந்த இந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையாக இருந்தது. அதே போன்று என்னுடைய மகன் நல்ல உடல்நலனுடன் இருக்கிறான். எனினும் குறை மாதத்தில் பிறந்ததால் அக்டோபர் மாதம் வரை ஐசியூவில் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ஸ்கர்ரி கூறியுள்ளார்.

லைக்ஸ்களை அள்ளும் புகைப்படங்கள்

ஸ்கர்ரி தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இதே போன்று முகநூலில் பயமில்லாத பிரசவம்(birth without fear) என்ற பக்கத்திலும் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன, அதிலும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை இந்த அதிசயக் குழந்தையின் படம் பெற்றுள்ளது.

80 ஆயிரத்தில் ஒரு குழந்தை

குழந்தை சராசரி எடையில் இருந்தாலும் தற்போதைய நிலையில் டியூப்கள் வழியாக தாய்ப்பால் மட்டுமே புகட்டப்படுகிறது.
80 ஆயிரத்தில் ஒரு குழந்தை மட்டுமே இது போன்று பனிக்குட உறையுடன் பிறக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

English summary
Pennyslvania woman delivered her own baby 11 weeks early from the front seat of her car, en caul, which means in the amniotic sac.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X