பிறை தெரிந்தது.. சவுதியில் ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என அறிவிப்பு! தமிழகத்தில் எப்போது தொடங்கும்?
சவுதி: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோன்பு இருப்பார்கள். இந்தியாவில் இந்த பிறை தெரியாத நிலையில், ரமலான் மாதம் மார்ச் 2ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்றே பிறை தெரிந்த நிலையில், மார்ச் 1ம் தேதி முதலே ரமலான் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

ரமலான் நோன்பு
ரமலான் மாத நோன்பும் ரம்ஜான் பண்டிகையும் பிறையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பிறை தெரிகிறதோ அதை வைத்தே நோன்பு தேதியும் பண்டிகையும் கொண்டாடப்படும். இதனால் இது ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை மாறுபடும். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அப்போது சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள்.
சவுதியில் தென்பட்ட பிறை
இதற்கிடையே ஹிஜ்ரி 1446 ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை சவூதி அரேபியாவில் சுதைர் மற்றும் துமைர் ஆய்வகங்களில் தென்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ரமலான் புனித மாதம் இன்று இரவு, பிப்ரவரி 28ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்த நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இன்றிரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்குகிறார்கள். நாளை மார்ச் 1 (சனிக்கிழமை) முதல் நோன்பு இருக்கவும் தொடங்கவுள்ளனர்.
இன்றிரவு பிறை தென்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்றிரவு முதல் ரமலான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர். சவூதி அரேபியாவில் ரமலான் தொடங்கியுள்ள நிலையில், ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத்உள்ளிட்ட பல நாடுகளும் அதையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்போது?
அதேநேரம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற பிற நாடுகளில் இன்று பிறை தெரியவில்லை. எனவே, நாளை இரவு முதலே ரமலான் மாதம் தொடங்கும். இங்கு நோன்பு பின்பற்றுவதும் ஒரு நாள் வரை தள்ளிப்போகும்.
முன்னதாக இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் நோன்பு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகம்மது அய்யூப் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 - 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications