பல மில்லியன் மதிப்பு.. ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்.. தாலிபானை வைத்து சீனா போடும் பிளான்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றிபெற்றதை முதல் நாடாக அங்கீகரித்தது சீனாதான். தாலிபானுக்கு எதிராக இருக்கும் நாடு என்று ஒரு காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சீனா, தற்போது தாலிபான் வென்றதும் முதல் நாடாக புதிய அரசை அங்கீகரித்தது. தாலிபான்களுக்கு ஆதரவாக சீனா இப்படி திடீரென களமிறங்க இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கிறது.. அதில் ஒரு காரணம் ஆப்கானிஸ்தான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்!
Recommended Video
பொதுவாக உலக போர்கள், சர்வதேச ஆதிக்கங்கள் எல்லாமே பூமியின் வளங்களை குறி வைத்துதான் இத்தனை நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. உலகில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த, கைப்பற்ற விரும்பிய காரணத்தால்தான் அமெரிக்கா இஸ்லாமிய நாடுகள் பலவற்றை குறி வைத்து தாக்கியது. தற்போது அதே போன்றதொரு இயற்கை வளத்தை கைப்பற்றுவதாக சீனா ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்புடன் நெருக்கமாகி வருகிறது.
ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் rare earth material எனப்படும் அரிய தனிமங்கள், கனிமங்களை கைப்பற்றுவதற்கான திட்டத்தில் சீனா இறங்கி உள்ளது. உலகின் ஒரே சூப்பர் பவர் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேகமாக உழைத்து வரும் சீனாவிற்கு தாலிபானின் வெற்றி "அல்வா துண்டு" போல வந்து மாட்டி இருக்கிறது.

அமெரிக்கா
சர்வதேச மார்க்கெட் உலகில் கோலோச்சி வரும் நிறுவனங்களில் ஒன்றான AllianceBernstein நிறுவனத்தின் இயக்குனர் ஷமைலா கான்தான் சீனாவின் இந்த திட்டம் குறித்து சர்வதேச மீடியாக்களுக்கு புட்டு புட்டு வைத்து இருக்கிறார். உலக நாடுகளை, முக்கியமாக ஆசிய நாடுகளை எல்லாம் Belt and Road Initiative என்ற திட்டம் மூலம் இணைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக சீனா முயன்று வருகிறது. இதற்கு ஆசிய நாடுகள் பல ஒப்புக்கொண்டு சீனாவிற்கு வழிவிட்டு உள்ளது. இந்தியா இன்னும் இதை ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தது. இப்படிபட்ட சூழ்நிலையில்தான் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தாலிபான்
ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதியை மாற்றும் எண்ணத்தில் தாலிபான் இருப்பதால் கண்டிப்பாக சீனாவின் Belt and Road Initiative திட்டத்தை தாலிபான் அமைப்பு வரும் நாட்களில் அனுமதிக்கும். தாலிபான்கள் வெற்றியால் கண்டிப்பாக சீனாவின் Belt and Road Initiative ரூட் கிளியர் ஆகிவிட்டது. அதோடு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை விரும்பாத தாலிபான் கண்டிப்பாக தங்கள் நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவை அனுமதிக்கும். பாகிஸ்தான், ரஷ்யா நட்பு உள்ளிட்ட பல காரணங்களால் சீனாவை தாலிபான்கள் கண்டிப்பாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கும் என்றே கூறப்படுகிறது.

சீனா
இதனால் மிகப்பெரிய லாபம் அடைய போவது சீனாதான் என்கிறார் ஷமைலா கான். ஆப்கானிஸ்தான் மண்ணில் புதைந்து கிடைக்கும் பொக்கிஷமான பல்வேறு கனிமங்கள், தனிமங்களை தாலிபான்கள் உதவியோடு சீனா எடுக்கும். இந்த மார்க்கெட்டை சீனாதான் பிடிக்க போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Belt and Road Initiative புரொஜெக்ட்டை விட இந்த கனிம திட்டத்தில்தான் சீனா அதிகம் கவனம் செலுத்தும் என்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரிதான தனிமங்கள் மற்றும் கனிமங்களின் மொத்த மதிப்பு மட்டும் 2020 மதிப்பீட்டின்படி 3 டிரில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிதான கனிமங்களை கைப்பற்றவே சீனா முயன்று வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் செய்ய செலவிட்ட மொத்த தொகை 3 டிரில்லியன் டாலர். அந்த மொத்த தொகைக்கும் அதிகமான பொக்கிஷம் ஆப்கானிஸ்தான் நாட்டு மண்ணுக்கு உள்ளே இருக்கிறது. இத்தனை நாட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கா இதை எடுத்து பிஸ்னஸ் பார்க்க தவறிய நிலையில் சீனா இதை கைப்பற்ற களமிறங்கி உள்ளது. அலுமினியம், லாண்டம், செரியம், நியோடைமியம், தங்கம், சில்வர், சிங்க், மெர்குரி, லித்தியம் என்று பல அரிதான கனிமங்கள் உள்ளே இருக்கின்றன. போன் தயாரிப்பு, வாகன தயாரிப்பு தொடங்கி விமானம், சாட்டிலைட் தயாரிப்பு வரை அனைத்திற்கும் பயன்படும் அரிதான கனிமங்கள் ஆப்கான் உள்ளே புதைந்து கிடைக்கிறது.

சீனா
இந்த பொக்கிஷத்தை எடுக்கும் திட்டத்தில்தான் தாலிபான்களுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. தாலிபான்களுக்கும், புதிய ஆப்கான் அரசுக்கும் பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் உதவ வேண்டும் என்றால் எங்களுக்கு இந்த கனிம திட்டங்களை கொடுக்க வேண்டும். எங்களை உங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு வரும் நாட்களில் சீனா செக் வைக்கும் என்கிறார்கள். பாகிஸ்தான், இலங்கையில் கட்டுமான வசதியை ஏற்படுத்துவதாக உள்ளே சென்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை சீனா கட்டுப்படுத்துவது போல ஆப்கானிஸ்தானும் சீனா வசம் செல்ல வாய்ப்புள்ளது என்று உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உய்குர் இஸ்லாமியர்
உய்குர் இஸ்லாமியர்களை எதிர்த்த சீனா இப்படி திடீரென தாலிபான்களை ஆதரிக்க காரணம் இந்த கனிமங்கள்தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அரிதான கனிமங்களை விற்பனை செய்யும் மார்க்கெட்டில் சீனாதான் டாப்பில் உள்ளது. உலகின் 35 சதவிகித அரிதான கனிம மார்க்கெட்டை சீனாதான் கட்டுப்படுகிறது. இதன் அர்த்தம் நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் போனோ கணினியோ பெரும்பாலும் சீனா தயாரித்ததாக இருக்கும் அல்லது சீனாவின் ஏற்றுமதி செய்யப்பட்ட கனிமத்தில் உருவாக்கப்பதாக இருக்கும்.

மார்க்கெட்
அப்படி ஒரு மார்க்கெட் சாம்ராஜ்யத்தை சீனா கொண்டு இருக்கிறது. தங்கள் நாட்டில் இருந்து மட்டும் 120,000 மெட்ரிக் டன் கனிமங்களை சீனா எடுத்து வருகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா இதில் எடுக்கும் மொத்த கனிமங்கள் அளவு வெறும் 15,000 மெட்ரிக் டன்தான். எவ்வளவு வேறுபாடு என்று பாருங்கள். இப்படிப்பட்ட சீனாவிற்கு கிடைத்த பொன் முட்டையிடும் வாத்துதான் ஆப்கானிஸ்தானும் அங்கு ஆட்சியை பிடித்து இருக்கும் தாலிபானும்.. தாலிபானை இனி "please" செய்வதற்காக சீனா எதுவும் செய்யும்.. எவ்வளவு கோடிகளை வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்கும்!












Click it and Unblock the Notifications