அமெரிக்க எம்.ஐ.டியின் அவலம்.. அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவியர்!
அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு திடீர் ஆய்வில், அங்கு பயிலும் மாணவியர் பெருமளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
மாணவியர் மட்டுமல்லாமல், மாணவர்களும் கூட இந்த சிக்கலைச் சந்திக்கிறார்களாம்.
எம்.ஐ.டி எனப்படும் மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் 17 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது.
11,000 மாணவர்கள்:
அங்கு பயிலும் 11,000 மாணவர்களும் இந்த ஆய்வில் பங்கேற்குமாறு கோரப்பட்டனர்.
35 சதவீதம் மட்டுமே:
ஆனால், 35 சதவீதம் பேர் மட்டும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.
17 சதவீத பெண்களுக்கு சிக்கல்:
கணக்கெடுப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட முடிவுகளில் 17 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது.
தடுக்கும் முயற்சிக்கு வரவேற்பு:
தற்போது இருக்கும் சூழலில், மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள மனித உரிமை ஆர்வலர்கள், கணக்கெடுப்பின் மூலம் பாலியல் துன்புறுத்தலை கண்டறிந்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளனர்.
கேட்க விரும்பாத தகவல்கள்:
இது குறித்து மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபரான சிந்தியா பர்னட் கூறுகையில், "நாங்கள் கேட்க விரும்பாத தகவல் இந்த கணக்கெடுப்பு வாயிலாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.
கவலை அளிக்கும் முடிவுகள்:
இதிலிருந்து மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவான புரிதல் இல்லை எனத் தெரிகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வு அளிக்க வேண்டிய நிலையை இது உணர்த்துகிறது" எனக் கூறினார்.
எதுக்கும் நம்ம குரோம்பேட்டை எம்.ஐ.டியிலும் இப்படி ஒரு சர்வே எடுத்துப் பார்க்கலாம்!
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications