என்னதாம்பா பிரச்சினை உங்களுக்கு.. மும்பை வீரர் தோள் மீது கை போட்டு கேட்ட 'கேப்டன்' விராட் கோலி
துபாய்: இவர்தான் கேப்டன்.. இப்படித்தான் ஒரு கேப்டன் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் சொல்வது போல விராட் கோலி நடந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாக சுற்றி வருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரின் அரைசதம் காரணமாக 165 ரன்கள் எடுத்தது.
வழக்கம்போல கடைசி கட்ட ஓவர்களில் ரன் அடிக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி. அல்லது இதைவிட பெரிய ஸ்கோர் வருவதற்கு வாய்ப்பு இருந்தது.

ஆர்சிபி அசத்தல்
இருப்பினும் இந்த முறை பெங்களூர் அணிக்கு பவுலர்கள் கை கொடுத்தனர். ஹர்ஷல் பட்டேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, வெறும் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சஹல் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்காரணமாக 111 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வலியால் துடித்த ரோகித் சர்மா
போட்டியின்போது ஒன் டவுன் களமிறங்கிய இஷான் கிஷன், கிரீஸ் விட்டு இறங்கி வந்து மேக்ஸ்வெல் வீசிய பந்தை அடித்த போது எதிர்முனையில் நின்றுகொண்டு இருந்த ரோகித் சர்மா கைகளில் அது பட்டது . இதனால் வலியால் துடித்தார் ரோகித் சர்மா. இதைப்பார்த்த இஷாந்த் கிஷன் வருத்தமடைந்தார். அது அவரது முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. ரோகித் சர்மா பக்கத்தில் சென்று நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தது போல ஏதோ பேசிக் கொண்டிருந்ததை வீடியோவில் பார்க்க முடிந்தது.

குற்ற உணர்வு
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மா சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். கை மணிக்கட்டு வலுவாக இல்லாததன் காரணமாக, சிக்ஸர் அடிக்க வேண்டிய அந்த ஷாட் கேட்ச் ஆக மாறிவிட்டது என்ற குற்றவுணர்வு இஷான் கிஷனுக்கு அப்போதே இருந்தது. அது மட்டுமல்ல, அவரும் கூட 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் தான் அடிக்க முடிந்தது. இதுவும் அந்த இளம் வீரருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
Recommended Video

அதிரடி வீரர் இஷான் கிஷன்
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் , அதிரடிக்காரர் என்று புகழ் பெற்றவர் இஷான் கிஷன். 20 ஓவர் கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து டீமுக்கு எதிராகவும் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராகவும் அரைசதம் கடந்து அசத்தியவர் இஷான் கிஷன். இவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாகத்தான் 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணியில் இஷான் கிஷன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவரைப் போன்ற இளம் வீரர்கள் பங்களிப்பால்தான், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அபார ஆட்டம்
கடந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 516 ரன்கள் குவித்தவர் இஷான் கிஷன். சராசரி 57 க்கு மேல். ஸ்ட்ரைக் ரேட் 145 க்குமேல். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடிக்க முடியவில்லை அவரால். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மிகவும் சோகமே உருவாக மாறிவிட்டார் இஷான் கிஷன்.

தோள் மீது கை போட்ட விராட் கோலி
இந்த நிலையில்தான் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி அவரை அழைத்து தோள் மீது கைபோட்டு ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது . ஐபிஎல்லில் எதிரணியை சேர்ந்தவராக இருந்தபோதிலும், இந்திய அணிக்காக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளவர் இஷான் கிஷன். அந்தவகையில் அவர் மனம் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக ஐபிஎல் அணி பாகுபாடுகளை மறந்து இந்திய அணியின் கேப்டன் என்ற மிகப்பெரிய பொறுப்புடன் விராட் கோலி இந்த அறிவுரையை வழங்கினார் என்று புகழ்கிறார்கள் நெட்டிசன்கள். விராட்கோலி கொடுத்த உத்வேகம் பலன் அளித்ததா, என்பது அடுத்தடுத்த ஐபிஎல் போட்டிகளில் இஷான் கிஷன் பேட்டிங் செய்வதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவர் பழைய படி அதிரடி ஆட்டக்காரராக மாறுவது மும்பை அணிக்கு மட்டும் கிடையாது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணிக்கும் நல்லது என்கிறார்கள் ரசிகர்கள்.
-
நீதான்யா சூப்பர்ஸ்டார்.. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி.. 3 தரமான அணிகளுடன் சம்பவம் செய்த சுட்டிப்பையன்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications