ரெட்புல் வெளியீடு.. வைரலாக பரவும் அட்டகாச சைக்கிள் சாகச வீடியோ
Subscribe to Oneindia Tamil
லண்டன்: ரெட் புல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு சைக்கிள் சாகச வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரெட்புல் நிறுவனம் யூடியூப்பில் 5.5 நிமிடங்களே ஓடக்கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கலைடாஸ்கோப் என வீடியோவுக்கு பெயர். இதில் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் கெய்ல் என்ற சைக்கிள் சாகச கலைஞர், பிஎம்எக்ஸ் வகை சைக்கிளை வைத்து சாகசம் செய்கிறார்.

இதில் என்ன விஷயமெனில், எந்த இடத்திலும் தடுமாறாமல், குறுக்கே வரும் தடுப்புகளை லாவகமாக கடந்து செல்கிறார். புருவங்களை உயரச் செய்யும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. தி நியூஸ் மினிட் இணையதளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
வைரலாக சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவி வருவதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.












Click it and Unblock the Notifications