எலிசபெத்தை ஏன் பிரிந்தேன்.. முறிந்த காதலுக்கு காரணங்களை அடுக்கும் வார்னே
லண்டன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷான் வார்னே, நடிகை எலிசபெத் ஹர்லி இடையிலான காதல் முறிந்து பல நாட்களாகி விட்டது.
அதற்கான சரியான காரணத்தை இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த உறவை தொடர்ந்து பராமரிக்க முடியாமல்தான் இருவரும் பிரிந்து விட்டதாக தற்போது வார்னே மனம் திறந்து கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் இந்த இருவரின் காதலும் நீடித்தது. பின்னர் 2013ம் ஆண்டு இருவரும் ஆளுக்கு ஒருபக்கமாக செல்ல முடிவெடுத்து குட்பை சொல்லிக் கொண்டனர்.

டைம் மேகஸின் பேட்டி:
ஹர்லிக்கு 50 வயதாகிறது. வார்னேவுக்கோ 45 வயதுதான். இந்த நிலையில் டைம் மேகஸினுக்கு வார்னே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஹர்லியுடனான காதல் முறிவு குறித்தும் பேசியுள்ளார்.

அருமையான டின்னர் இரவுகள்:
"உறவுகள் எப்போதுமே கடினமானவைதான். உண்மையிலேயே கஷ்டமானது. ஆனால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது. இருப்பினும் எங்களுக்கு அப்படி ஒரு கஷ்டம் வந்தது.எங்களுக்குள் எப்போதுமே அருமையான டின்னர் இரவுகள் அமையும். அதேசமயம், அந்த இரவுகள் தொடர்ந்து நீடிக்கவில்லை.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு:
எங்களது வேலை வேறு பிரச்சினையாக இருந்தது. இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்து விட்டோம். அதுவும் உறவில் சிக்கல் வர ஒரு காரணம்.

விவசாயி மட்டுமே:
அதேசமயம், அதனால் மட்டுமே எங்களது உறவு பிரியவில்லை.நாங்கள் முதன் முதலில் சந்தித்தபோது அவர் வேலை எதிலும் இல்லை. விவசாயியாக மட்டுமே இருந்தார். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.

மாடலிங் உலகில் ஹர்லி:
பின்னர் ஹர்லி நடிக்கப் போனார். மாடலிங் செய்யப் போனார். டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நானும் மீண்டும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். எங்களுக்குள் நேரம் இல்லாமல் போனது.

அமெரிக்காவுக்கு பறந்தார்:
அவர் அமெரிக்காவுக்குப் போனார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நானும் கிரிக்கெட் கமெண்டரி பக்கம் கவனம் செலுத்தினேன். என்னுடைய குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

குழப்பமான காதல்:
மொத்தத்தில் எல்லாமே குழப்பமாகி விட்டது. இருவருக்கும் இது ஒரு பெரும் குழப்பமாக மாறிப் போனது. கஷ்டமாகி விட்டது. இதுவும் பிரிய முடிவு செய்ததற்கு ஒரு காரணம்" என்றார் அவர்.பிரிந்தாலும் கூட இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை. முன்பு காதலர்களாக சந்தித்தனர். இப்போது நண்பர்களாக சந்தித்துக் கொள்கிறார்களாம்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications