ரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. 310 வருட பழமை.. கடலுக்கு அடியில் ரோபோ கண்டுபிடித்த பிரம்மாண்ட கப்பல்!
ரோபோ நீர் மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் 310 வருட பழமையான கப்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
நியூயார்க்: ரோபோ நீர் மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் 310 வருட பழமையான கப்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது.
இது மிகவும் பழையமானது என்று கூறப்படுகிறது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். அப்போதில் இருந்தே இந்த கப்பலை தேடி வருகிறார்கள்.
ஆனால் இப்போதுதான் ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார்.கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற அவர் எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

ரோபோட்
ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல் பொதுவாக கடலுக்கு அடியில் காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கும் நீர் மூழ்கி கப்பல் ஆகும். இதில் ஜெஃப் ஆராய்ச்சி செய்வதற்காக, சில வாரங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் சென்றுள்ளார். அவர் கடலுக்கு அடியில் சோனார் கதிர்களை அனுப்பி உள்ளே இருக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய சென்றுள்ளார்.

எப்படி கண்டுபிடித்தது
ஆனால் அந்த சிக்னலில் கடலுக்கு அடியில் அசாதாரண பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் 2000 அடி வரை சென்று ஆராய்ந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த மூழ்கி சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளார். முழுவதும் தானியங்கி மூலம் இயங்கும், அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல்தான் இந்த கண்டுபிடிப்பிற்கு உதவியது என்றுள்ளார்.

என்ன இருக்கிறது
இந்த சரக்கு கப்பல் முழுக்க தங்கம், வெள்ளி, வைரம் இருந்துள்ளது, நிறைய நகைகள் அப்படியே இருந்துள்ளது. இது மிகவும் பழையது என்பதால் சாதாரண தொகையைவிட அதிக விலைக்கு விற்பனை ஆகும். இதன் மதிப்பு 1.156 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எடுக்கப்பட்டால் விற்கப்பட வாய்ப்பில்லை.

ரகசியம்
இந்த கப்பல் யாருக்கு சொந்தமானது, சரியாக கடலின் எந்த பகுதியில் இருக்கிறது என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கொலம்பியா கடலின் அடிப்பகுதியில் ஆழத்தில் இந்த கப்பல் இருந்துள்ளது. ஆனால் சரியான இடம் எதுவென்று யாருக்கு தெரிவிக்கப்படவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications