ஹிஸ்புல்லா மூத்த உறுப்பினர் கைது.. லெபனானில் நுழைந்து இஸ்ரேல் சிறப்பு படை அதிரடி.. பரபரப்பு சம்பவம்
பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் லெபனானுக்குள் புகுந்த இஸ்ரேல் சிறப்பு கமாண்டோக்கள் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினரை கைது செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி 250க்கும் அதிகமானவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை அழிக்க காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.
இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஈரானும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக இறங்கி உள்ளது. இஸ்ரேல் மீது ஏற்கனவே ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் ஈரானுக்குள் நுழைந்து பதிலடி கொடுத்துள்ளது. தற்போது மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளார். தற்போது ஹிஸ்புல்லா புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், லெபனானுக்குள் புகுந்த இஸ்ரேல் கடற்படை சிறப்பு கமாண்டோக்கள் ஹிஸ்புல்லா கடற்படை தளபதியை கைது செய்தனர். இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்தவரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் இமாத் ஃபடெல் அம்ஹாஸ் என்று கூறப்படுகிறது. இவர் லெபனானின் கடற்படையில் செயல்பட்டு வருவதோடு, ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை லெபனான் மறுத்துள்ளது. இதுபற்றி லெபனான் தரப்பில்‛‛இஸ்ரேல் கைது செய்துள்ள நபரின் பெயர் இமாத் ஃபடெல் அம்ஹாஸ். இவர் ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து செயல்படவில்லை '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications