அமெரிக்க அரசு முடக்கம்: இதற்குத்தான் ஆசைப்பட்டதா குடியரசுக் கட்சி?
வாஷிங்டன்: அமெரிக்க அரசு சமீபத்தில் முடங்கியது. தொடர்ந்து 16 நாட்கள் அரசு இயந்திரம் ஸ்தம்பித்துப் போய்விட்டது.
அரசின் அத்தனை நிறுவனங்களும் அதன் இணையதளங்களும் கூட முடங்கின. பொதுப் பூங்காக்கள் கூட மூடப்பட்டன. 8 மில்லியன் பணியாளர்கள் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த அளவு முடங்கிப் போகக் காரணமான குடியரசுக் கட்சி, பட்ஜெட் நிறைவேற வேண்டுமானால் பல நிபந்தனைகளை அரசு ஏற்க வேண்டும் என கெடுபிடி காட்டியது.

அப்படி அக்கட்சி வைத்த நிபந்தனைகள் இவை...
- ஒபாமா கேர் எனும் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு பணம் ஒதுக்கக் கூடாது.
- ஒபாமாகேர் திட்டத்தை முடிந்தவரை தாமதப்படுத்த வேண்டும்
- ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும்
- அதிபர், அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் சபையினருக்கான கவரேஜுக்கு மறுப்பு
- கீஸ்டோன் பைப்லைன் திட்டத்துக்கு அனுமதி
- தனி நபர் அல்லது குடும்பம் அரசு உதவி பெறத் தகுதி நிர்ணயம் செய்தல்
- நிதித்துறை ஊழியர்களின் பென்ஷன் திட்டத்தில் மாறுதல்
- எண்ணெய் துரப்பனப் பணியை விரிவுபடுத்துதல்
- இணைய சமநிலையைத் தடுத்தல்
- சிவில் நீதித் துறையில் மாற்றங்கள்
- நிலக்கரியைக் கொண்டு இயங்கும் மின்நிலையங்களை குறைந்த மாசு வெளியேற்றுபவையாக மாற்றுதல்
- வருமான வரியில் மாறுதல்கள்
- நிலக்கரிச் சாம்பலைக் கட்டுப்படுத்த புதிய நெறிமுறைகள்
- மருத்துவ உபகரணங்கள் மீது கூடுதல் வரி
- கடன் உச்சவரம்பு விதிகளை மாற்றுதல்
...இவையெல்லாம் குடியரசுக் கட்சியால் மிகக் கடுமையாக வலியுறுத்தப்பட்டவை.
ஆனால் இவற்றையில் ஒன்றைக்கூட அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை என்பதுதான் முக்கியம்.
என்னவெல்லாம் கேட்டு அரசை குடியரசுக் கட்சி 16 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்ததோ, அவற்றில் ஒன்றுகூட அக்கட்சிக்கு கிடைக்கவே இல்லை. பூஜ்யம் பலன்தான்.
இதற்காகத்தான் ஆசைப்பட்டீர்களா குடியரசுக் கட்சிக்காரர்களே.. இதற்காகத்தான் அமெரிக்காவை 16 நாட்கள் இருளில் தள்ளினீர்களா? என இப்போது அமெரிக்க மீடியா திருப்பிக் கேட்க ஆரம்பித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications