ராய்ட்டர் நிறுவனத்தின் பாகிஸ்தான் தலைமை செய்தி ஆசிரியரின் மரணத்தில் மர்மம் நீடிப்பு
இஸ்லாமாபாத்: ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் பாகிஸ்தான் தலைமை செய்தி ஆசிரியர் மரியா கோலோவ்னினாவின் மரணத்தில் மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்-ன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவர் மரியா கோலோவ்னினா. ரஷ்யாவை சேர்ந்த 34வயதான மரியா கடந்த திங்களன்று வழக்கம் போல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பின்னர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அவர் நீண்டநேரமாகியும் அலுவலகத்துக்கு திரும்பாததால் அவரை சக செய்தியாளர்கள் தேடி இருக்கின்றனர். அப்போது குளியலறை அருகே வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தார் மரியா.
உடனடியாக அவரை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை அறிய பிரேத பரிசோத நடத்தப்பட்டது.
தற்போது அந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், மரியாவின் கழுத்துப் பகுதியில் 3 கீறல்கள் போன்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் சுவாசிக்க முடியாமல் போய் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அவரது உதடு, கைகள், பாதம் ஆகியவை நீலநிறமாக மாறியிருந்திருக்கிறது. தற்போது மூளை, இதயம், கழுத்துப் பகுதி ஆகியவை தடயவியல் துறையின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குப் பின்னரே அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும் என்கின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications