விடாமல் துரத்தும் சாபம்.. காசா போரில் ஈடுபட்ட இஸ்ரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை
டெல் அவிவ்: காசா போரில் ஈடுபடுத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். தற்கொலைகள் அதிகரித்திருப்பதால் இஸ்ரேல் ராணுவத்தில் அதிருப்தி எழுந்துள்ளது.
நேற்றைய தினம் மற்றொரு இஸ்ரேலிய ராணுவ வீரர் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தெற்கு இஸ்ரேலில் உள்ள Sde Teiman ராணுவ தளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த ராணுவ தளத்திற்கு வந்தார். இவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கடந்த மாதம் காசாவில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது. இவரது தளபதிகள் அவரது ஆயுதத்தை பறிமுதல் செய்ய முடிவு செய்தனர். இவரிடம் எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்தது.
கோலானி பிரிகேட்டின் உறுப்பினரான இந்த வீரர், ராணுவ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்டார். தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு வீரரின் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
இவருக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, காசா போரினால் ஏற்பட்ட மனநலப் பிரச்சினைகள் காரணமாக வடக்கு நகரமான சபீட்-க்கு அருகிலுள்ள ஒரு காட்டில் ரிசர்வ் வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றார். இஸ்ரேல் ஹயோம் செய்தித்தாளின் புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 21 வீரர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
இது குறித்து இஸ்ரேலிய ராணுவம் மனநல ஆலோசனைக்கான உதவி மையங்களை நிறுவி, மனநல ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இருப்பினும், போர் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் வீரர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கிட்டத்தட்ட 57,700 பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்கள்.
காசாவில் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் ஆகியோரை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த நவம்பரில் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications