ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை சுட்டு கொன்ற போட்டி தீவிரவாத அமைப்பு! சிரியாவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்தான் பிறரை கழுத்தறுத்து கொலை செய்து உலகம் பார்த்துள்ளது. இப்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கழுத்தறுக்க ஒரு தீவிரவாத அமைப்பு வீறுகொண்டு செயலாற்றி வருகிறது. அந்த அமைப்பின் பெயர்தான் ஜெய்ஸ் அல்-இஸ்லாம்.

தன்னை இஸ்லாம் மார்க்கத்தின் ராணுவம் என்று அழைத்துக்கொள்கிறது இவ்வமைப்பு. சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மையில், பீரங்கி, நவீன ரக துப்பாக்கிகளுடன் அந்த அமைப்பின் தீவிரவாதிகள் நிற்கும் காட்சியை புகைப்படமாக வெளியிட்டது ஜெய்ஸ் அல்-இஸ்லாம்.

Rival Syrian terror group turns tables on ISIS fighters

தற்போது ஜெய்ஸ் அல்-இஸ்லாம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஷாக் கொடுப்பதாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பிற மதத்தவர்களையோ அல்லது, பிற நாட்டு பிணையக் கைதிகளையோ பிடித்து, ஆரஞ்சு வண்ண ஆடை உடுத்தச் செய்து, கழுத்தறுப்பது வழக்கம்.

அதற்கு பதிலடியாக ஜெய்ஸ் அல்-இஸ்லாம் அமைப்பு தீவிரவாதிகளால், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலர் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு கறுப்பு ஆடை அணிவித்து, ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தீவிரவாதிகள் ஆரஞ்சு ஆடை அணிந்துகொண்டு, துப்பாக்கியால் பின்னந்தலையில் சுட்டு துடிக்க துடிக்க கொன்றுள்ளனர்.

தீவிரவாதிகளின் கழுத்தை அறுக்கும் முன்பாக, ஜெய்ஸ் அல்-இஸ்லாம் குழுவின் கமாண்டர் உருது மொழியில் இவ்வாறு பேசுகிறார்: "அல்லா எந்த ஒரு நோயையும் மருந்து இல்லாமல் உருவாக்குவதில்லை". இவ்வாறு கூறிவிட்டு சுட்டுக்கொல்ல சகாக்களுக்கு உத்தரவிடுகிறார்.

இப்போது, யார் உண்மையான போராளிகள் என்பதில் இவ்விரு குரூப்புக்கும் தகராறு வெடித்துள்ளது உறுதியாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+