65 விநாடிகளில் மறுபடியும் "பேச்சலர்" ஆன மிஸ்டர் பீன்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மிஸ்டர் பீன் என்ற கேரக்டர் மூலம் உலகெங்கும் பிரபலமான இங்கிலாந்து நடிகர் ரோவன் அட்கின்சனை அவரது மனைவி சுனேத்ரா விவாகரத்து செய்துள்ளார். 65 விநாடிகளில் இந்த விவாகரத்து வழங்கப்பட்டது.

பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்திற்காக ரோவன் அட்கின்சனை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சுனேத்ரா தெரிவித்துள்ளார். பிபிசியில் மேக்கப் கலைஞராக முன்பு பணியாற்றியவர் சுனேத்ரா. இருவரும் 24 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். இருவருக்கும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

24 ஆண்டு கால திருமண வாழ்க்கையை தற்போது இருவரும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

காமெடி நடிகை

காமெடி நடிகை

சுனேத்ராவும் காமெடி நடிகைதான். மத்திய லண்டனில் உள்ள கோர்ட்டில் இவர்களது விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை 65 விநாடிகளில் வாசித்து முடித்தார் நீதிபதி. அப்போது ரோவன் கோர்ட்டுக்கு வரவில்லை.

ரோவனுக்கு 60..

ரோவனுக்கு 60..

ரோவன் அட்கின்சனுக்கு 60 வயதாகிறது. 54 வயதான சுனேத்ராவும் இவரும், 1990ம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களின் பிரிவுக்கு ரோவன் அட்கின்சனின் புதிய காதல்தான் காரணமாகும்.

32 வயது லூசி

32 வயது லூசி

ரோவன் அட்கின்சன் தற்போது 32 வயதான லூசி போர்ட் என்பவரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருகிறார். இந்தக் காதல் பூத்ததுமே ரோவனும், சுனேத்ராவும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

அப்செட்டான சுனேத்ரா

அப்செட்டான சுனேத்ரா

ரோவன் தன்னை விட பாதி வயதான பெண் மீது மோகம் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை சுனேத்ராவுக்கு. இதையடுத்தே அவர் கணவரைப் பிரிந்தார். விவாகரத்துக்கும் விண்ணப்பித்தார்.

சிரிக்க வைத்தவர் வாழ்க்கை

சிரிக்க வைத்தவர் வாழ்க்கை

தனது சேட்டைத்தனங்கள் மற்றும் நகைச்சுவையால் சிரிக்க வைத்து வந்த ரோவன் தற்போது சிக்கலான காலகட்டத்தில் உள்ளார். ஆனால் தனது வாழ்க்கைச் சிக்கலை அவிழ்க்கும் திறமை தன்னிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+