இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search

படிக்கட்டை சோதனைக்கு கொடுத்தவருக்கு அடித்தது லக்.. 100 கோடி மதிப்பிலான விண்கல்லாம்!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    நியூயார்க்: அமெரிக்காவில் 88 வருடம் பழமையான விண்கல் ஒன்றை, வீட்டில் படிக்கட்டாக பயன்படுத்தி இருக்கிறார் பெண் ஒருவர்.

    அமெரிக்காவின் மெக்‌ஷிகன் மாகாணத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள விவசாய பெண் ஒருவரின் வீட்டில் உள்ள படிக்கட்டில் இந்த பழைய விண்கல் காணப்பட்டு இருக்கிறது.

    அது விண்கல்லின் ஒரு பாகம் ஆகும். இது மிகவும் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எப்படி கண்டுபிடித்தார்

    எப்படி கண்டுபிடித்தார்

    தனது வீட்டின் படிக்கட்டில் பல வருடமாக இருக்கும் இந்த கல்லை பார்த்த அந்த வீட்டு பெண் பல வருடமாக சந்தேகத்தில் இருந்துள்ளார். இது என்ன மாதிரியான கல் என்று ஆராய்ச்சி செய்ய ஆசைப்பட்டு, அதனை அதே பகுதியில் உள்ள வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்கு என்ற பெண்ணிடம் கொடுத்துள்ளார். அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இது பழைய விண்கல் என்று கண்டுபிடிக்கப்ட்டது.

    மிகவும் பழமை

    பழையது என்றால் இது மிகவும் பழையது. 88 வருடங்களுக்கு முன் விழுந்த விண்கல் ஒன்றின் உடைந்த துகள் ஆகும் இது. அதை வைத்து யாரோ வீடு கட்டும் போது இந்த படியை அமைக்க இதை பயன்படுத்தி இருக்கிறார்கள். 1930களில் இந்த விண்கல் பூமியில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மதிப்பு என்ன

    மதிப்பு என்ன

    இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை போகும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய விண்கல் துகள் இதுதான். இதில் நிறைய இரும்பு தாது பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    வாங்க போட்டி

    வாங்க போட்டி

    இதை வாங்க இப்போதே பலர் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இதனால் இதை அந்த பெண் ஏலம் விடப்போவதாக கூறியுள்ளார். இதன் காரணமாக இதன் மதிப்பு இன்னும் பல கோடிகளை தாண்ட வாய்ப்புள்ளது.

    வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

    English summary
    Rs.100 crore worth asteroid used as a doorstep for years in the USA.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more