இப்படி ஒரு ஆஃபரா! குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம் போனஸ் அறிவித்த நிறுவனம்.. எந்த நாட்டில் தெரியுமா?
சியோல்: தென்கொரியாவில் பிறப்பு விகிதம் வேகமாக வளர்ந்து வருவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் தென்கொரியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடுதான் தென்கொரியா. சிறிய பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி தான். சிறிய நாடாக இருந்தாலும் டெக்னாலஜி துறையில் வேற லெவல் வளர்ச்சியில் இந்த நாடு உள்ளது. ஒருபக்கம் வடகொரியா அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டே இருந்தாலும் தென்கொரியா வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டும் விதமாக உள்ளது.

ஆனால், தென்கொரியா இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அந்த நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் கடந்த வருடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ”2022 -இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவிகிதம் குறைவு ஆகும்.
பிறப்பு விகிதம் குறைவு: திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. தென் கொரியப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் ஆண்டுக்கு 1.05 என்ற அளவிலே உள்ளது. மக்கள்தொகையைத் தக்கவைப்பதற்கு 2.1 என்ற விகிதம் தேவைப்படுகிறது. இதனால், இந்த விகிதத்துடன் ஒப்பிடும் போது 1.05 என்பது மிகவும் குறைவு ஆகும்.
இது 2025-ல் 0.65 சதவிகிதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினரிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழைந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்களையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.
ரூ.62 லட்சம் நிதி உதவி: இந்த நிலையில் தென்கொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக புதிய சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான பூயங் குரூப் என்ற நிறுவனம் கூறியிருப்பதாவது:-

குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ.62.3 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் மொத்தமாக 70 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டுள்ள ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.43.6 கோடி வரை வழங்குவோம்.
ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நேரடியாக நிதி உதவி அளிப்பது குழந்தை வளர்க்கும் போது ஏற்படும் நிதி சிக்கல்களை தவிர்க்கும். நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக அமையும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications