ரஷ்யா-உக்ரைன் இடையே 3-வது மின்ஸ்க் ஒப்பந்தம்? இதுவாவது நடைமுறைக்கு வருமா?
மின்ஸ்க்: ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடையேயான பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான 2 மின்ஸ்க் ஒப்பந்தங்கள் தோல்வி அடைந்த நிலையில் 3-வது ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? அப்பிராந்தியத்தில் அமைதி திரும்புமா? என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு.
உக்ரைனின் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க், டொனேட்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய மொழி பேசும் போராளிகள் சுயாட்சி கோரி உக்ரைன் ராணுவத்துடன் யுத்தம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததால் இம்மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவதில் உக்ரைன் அரசு தயக்கம் காட்டுகிறது.

பின்னணி என்ன?
கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவின் ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் வன்முறை ஏற்பட்டு 2600 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 2014-ம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதலாவது மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராத நிலையில் மீண்டும் மோதல் வெடித்தது.

மின்ஸ்க் ஒப்பந்தங்கள்
இதனால் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் ரஷ்யா- உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைகளின் முடிவில் 2-வது மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மின்ஸ்க் 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது. 2-வது மின்ஸ்க் ஒப்பந்தத்தை உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மன் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டனர். 2-வது மின்ஸ்க் ஒப்பந்தம் 13 அம்சங்களை கொண்டது. ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களின் மாகாணங்களில் அதிகாரப் பரவல், சுயாட்சி நிர்வாகம் உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொண்டது இந்த ஒப்பந்தம்.

யுத்தம் நடத்தும் ரஷ்யா
ஆனால் இதனை உக்ரைன் அமல்படுத்தவில்லை. அதேநேரத்தில் ரஷ்யாவின் கடுமையான எதிர்ப்பை மீறி நேட்டோ நாடுகளுடன் நட்பு பாராட்டியது உக்ரைன். நேட்டோ அமைப்பும் நேட்டோ படைகளும் தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் ரஷ்யாவை எதிர்த்தது உக்ரைன். இதனை விரும்பாத ரஷ்யா மின்ஸ்க் ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை என கூறி இப்போது உக்ரைன் மீது படையெடுப்பு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பும் பேரழிவை எதிர்கொண்டிருக்கும் நிலையில் மின்ஸ்க் நகரில் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Recommended Video

மின்ஸ்க் நகரில் பேச்சுவார்த்தை
மின்ஸ்க் நகரில் நடைபெறும் இன்றைய பேச்சுவார்த்தை முடிவில் முந்தைய ஒப்பந்தங்களை உக்ரைன் செயல்படுத்த வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தக் கூடும். தமது கடும்போக்கு நிலைப்பாட்டில் இருந்து உக்ரைன் சற்று இறங்கி வரவும் கூடும். மேலும் இன்றைய பேச்சுவார்த்தை முடிவில் 3-வது மின்ஸ்க் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய மின்ஸ்க் நகர் பேச்சுவார்த்தைகள் அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே சர்வதேச நாடுகளின் பெரும் எதிர்பார்ப்பாகும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications