போடு வெடியை! எங்களையே சுரண்டுறீங்களா? அமெரிக்கா மீது கண் சிவந்த மேற்கு ஆப்பிரிக்கா! தோள் தந்த ரஷ்யா
வாகடூகு: மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தற்போது கொதித்தெழுந்து ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த நாடுகளுக்கு ரஷ்யா உதவுவதாக தெரிவித்துள்ள நிலையில் ஆப்பிரிக்க அரசியலில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இல்லாத இயற்கை வளங்களே கிடையாது எனலாம். குறிப்பாக இந்நாடுகளில் கிடைக்கும் யுரேனியம் உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காது. யுரேனியம் அணு குண்டு தயாரிக்க அடிப்படையாக அமைகிறது. அதேபோல மின்சார உற்பத்தியில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. அணு உலைகளில் எரிபொருளாக இந்த யுரேனியம்தான் பயன்படுகிறது. மற்ற நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தை விட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் யுரேனியம் அதிக நேரம் எரியும் தன்மை கொண்டது.

இப்படி ஏராளமான வளங்கள் இந்த நாடுகளில் கிடக்கின்றது. ஆனாலும் உலகின் மிகவும் ஏழ்மை நாடுகளின் பட்டியலில் இந்த நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன. எப்படி? இந்த வறுமைக்கு காரணம் பிரான்ஸும் அமெரிக்காவும்தான். தற்போது ஐரோப்பிய நாடுகளில் எரியும் மூன்று பல்புகளில் ஒரு பல்புக்கான மின்சாரம் இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் யுரேனியத்திலிருந்து கிடைக்கிறது. இப்படி யுரேனியம் தொடங்கி பல இயற்கை வளங்களை இந்த நாடுகள் சுரங்கம் மூலம் கொள்ளையடித்து சென்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதரவாக அந்நாட்டின் ஆட்சியாளர்கள் உடந்தையாக இருக்கிறார்கள்.
இந்த சூழலை கவனித்த புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் உள்ளிட்ட நாடுகளின் ராணுவம் அதிரடியாக களத்தில் இறங்கி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கைகூலியாக இருக்கும் ஆட்சியாளர்களை கைது செய்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த நாடுகளுடனான தங்களது ராஜ்ய உறவுகளை துண்டித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில்தான் கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்யா-ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மொத்தம் உள்ள 54 ஆப்பிரிக்க நாடுகளில் 49 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. அதில் அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக தாங்கள் ஓரணியில் திரள்வதாக ஆப்பிரிக்க நாடுகள் உறுதியேற்றுள்ளன. குறிப்பாக புர்கினோ பசோ இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் கவனித்து வந்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் நாடுகளின் கிளர்ச்சி படையை தீவிரவாதிகள் என்று விமர்சித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அமெரிக்காவுக்கு இந்த விஷயம் தலைவலிதான். ஏனெனில் ஏற்கெனவே திரும்பிய பக்கமெல்லாம் சீனா தனது பொருளாதார நடவடிக்கையால் அமெரிக்காவை காலி செய்து வருகிறது. போதாத குறைக்கு ரஷ்யா உக்ரைன் மீது தீவிரமாக போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு எவ்வளவுதான் ஆயுத உதவி செய்தாலும் உக்ரைனால் பெரியதாக எதையும் செய்துவிட முடியவில்லை. சரி நமக்கு துணைக்கு ஐரோப்பிய நாடுகள் வரும் என்று எதிர்பார்த்தால்.. அந்நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இப்படி இருக்கையில்தான் தற்போது ஆப்பிரிக்காவும் சுதந்திரம் குறித்து பேசி புரட்சி செய்து வருகிறது. எனவே இந்த நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா முற்றிலுமாக பலமிழந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் ஆசிய நாடுகளின் கைதான் ஓங்கியிருக்கும். ஆப்பிரிக்க நாடுகள் விஷயத்தில் சீனா ஆதரவு தெரிவித்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்துவிட்டால் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் உயரும் என்பதில் சந்தேகம் இருக்காது.
-
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்?












Click it and Unblock the Notifications