"உக்ரைன் போரில் முதற்கட்ட வெற்றி! எங்கள் அடுத்து இலக்கு இது தான்!" ரஷ்யா பரபர கருத்து
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்யா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்து 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை..
உக்ரைன் நாட்டில் உள்ள கீவ், கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்
ஒருபுறம் போர் தொடரும் நிலையிலும், மறுபுறம் ரஷ்ய ராணுவம் தனது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் உரிமை கோரும் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தை உக்ரைன் அதிகரித்துள்ளது.

முதற்கட்ட இலக்குகள்
இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாகவும் ரஷ்யாவின் இலக்குகள் தொடர்பாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் இலக்குகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டதாகவும் இப்போது ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பகுதியில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்ட வெற்றி
இது தொடர்பாக ரஷ்ய பொதுப் பணியாளர்களின் முதன்மைத் தலைவர் செர்ஜி ருட்ஸ்காய் கூறுகையில், "உக்ரைன் ஆயுதப் படைகளின் போர்த் திறனைக் கணிசமாகக் குறைத்துள்ளோம். இது எங்களுக்கான முதற்கட்ட வெற்றி. எங்கள் அடுத்த இலக்கு டான்பாஸின் விடுதலையில் தான் உள்ளது. இதற்கான முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் 5 வாரங்களைக் கடந்து தொடரும் சூழலில், ரஷ்யா தரப்பின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு
தொடரும் உக்ரைன் போர் காரணமாக கீவ் நகரில் கடந்த சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்தார். அதேபோல உக்ரைன் நாட்டின் மற்றொரு முக்கிய நகரான மரியுபோல் நகரிலும் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் அழுத்தம்
உக்ரைன் போர் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருந்த போதிலும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications