ரஷ்யாவில் பயங்கரம்.. சர்ச்கள் மீது திடீர் தாக்குதல்! ஸ்பாட்டிலேயே 15 பேர் சுருண்டு விழுந்து.. கொடுமை
மாஸ்கோ: ரஷ்யாவில் ஊடுருவிய பயங்கரவாதிகள் தேவாலயங்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில், 15 பேர் பலியாகி இருக்குகிறார்கள்.. ஏராளமானோர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் 2 நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.. யூத வழிபாட்டுத்தலங்களிலும், ஒரு போலீஸ் செக்போஸ்ட்டிலும் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நேற்று மாலை நடத்தியிருக்கிறார்கள்.

தாக்குதல்: இந்த தாக்குதலில் மகாச்கலாவில் ஈடுபட்டவர்களில் 4 பேர்களும், டெர்பன்ட் பகுதியில் ஈடுபட்டவர்களில் 2 பேர்களும் என மொத்தம் 6 பயங்கரவாதிகளை போலீஸார் சுட்டு தள்ளினார்கள்.. ஆனாலும், இந்த பயங்கர தாக்குதலில், பாதிரியார், பொதுமக்கள், போலீஸ் என பலரும் உயிரிழந்துவிட்டார்கள். இதில் இறந்த பாதிரியார் டெர்பெண்டில் 40 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவராம்..
டகேஸ்டான் மாகாணத்தில் மகாச்கலா மற்றும் டெர்பன்ட்டில் நடந்த இந்த தாக்குதலை தீவிரவாத சதி என்று அந்த பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் அறிவித்திருக்கிறார்.
டெலிகிராம்: அத்துடன் இந்த தாக்குதல் குறித்து டெலிகிராம் தளத்திலும் ஆளுநர் மெலிகோவ்கருத்து தெரிவித்துள்ளார். "இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன நோக்கத்தில் இதை செய்திருக்கிறார்கள என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்.. மகாச்கலாவில் நடந்திருக்கும் இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. சமூகத்தை சீர்குலைக்க நடந்த சதியாகும்..
போர் நம்முடைய வீடு வரைக்கும் நீண்டுவிட்டதை இன்று சந்தித்துள்ளோம்... தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடந்த 2 நகரங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
துக்க சம்பவம்: இந்த துக்க சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 24 முதல் 26 தேதி வரை துக்க நாட்கள் கடைபிடிக்கப்படும்... தேசியக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன... இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் வெளிப்படையாக பொறுப்பு ஏற்கவில்லை.. எனினும் ரஷ்ய புலனாய்வுக் குழு இந்தத் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது" என்றார் ஆளுநர்.
இப்படித்தான் 3 மாதங்களுக்கு முன்புகூட மாஸ்கோவில் ஒரு இசை நிகழ்ச்சியின்போது, கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, 145 பேர் அநியாயமாக இறந்துவிட்டார்கள்..
ரஷ்யா: அந்த தாக்குதலுக்கு பின்னணியில் உக்ரைனால் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இருந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது.. ஆனால் உக்ரைன் அந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்திருந்த நிலையில், மாஸ்கோ தாக்குதலுக்கு "ஐஎஸ்ஐஎஸ் கோரசான்" அமைப்பு முழுப்பொறுப்பேற்றிருந்தது.
இப்போது, நேற்றைய தினம் நடந்துள்ளதும் ரஷ்யாவின் மிகப்பெரிய தாக்குதலாக அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications