உக்ரைனுக்கு ஆயுத சப்ளை? "கணிக்க முடியாத விளைவுகள்" வரும்! அமெரிக்காவுக்கு பறந்த ராஜதந்திர தகவல்!
மாஸ்கோ : உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அனுப்புவதை நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு ரஷ்யா இந்த வாரம் வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், இல்லையேல் கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் என அதில் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டொ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து மார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

உக்ரைன் போர்
உக்ரைனில் உள்ள இராணுவ வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக ரஷ்யா எச்சரித்தது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் சுமார் 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தார். கருங்கடலில் ஒரு போர்க்கப்பலை இழந்த பிறகு உக்ரேனிய ராக்கெட் தொழிற்சாலையையும் ரஷ்யா தாக்கியது.

அமெரிக்கா உதவி
பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு 1.7 பில்லியனுக்கும் அதிகமான உதவிகளை ஜோ பிடன் நிர்வாகம் அனுப்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. உக்ரைனுக்கு சமீபத்தில் $800 மில்லியன் மதிப்பிலான ராணுவ தொகுப்பு உதவிகளை அறிவிக்க ஜோ பிடன் நிர்வாகம் தயாராகிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் ஜோ பிடன்
இது உக்ரைனுக்கு மிகவும் பயனுள்ள ஆயுத அமைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பாக இருக்கும் என கூறப்படும் நிலையில், அதில் பீரங்கி அமைப்புகள், பீரங்கி குண்டுகள் மற்றும் கவசங்கள் ஆகியவை அடங்கும். உக்ரைனுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை மாற்றுவதற்கும் நான் ஒப்புதல் அளித்துள்ளேன் என்று ஜனாதிபதி ஜோ பிடன் கூறியிருந்தார். உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
Recommended Video

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அனுப்புவதை நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ரஷ்யா இந்த வாரம் வெளியுறவுத்துறையை வலியுறுத்தியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் இந்த ஆவணம் குறித்து முதலில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இது ஒரு "டிமார்ச்" என்று அழைக்கப்படுகிறது. "உக்ரைனின் பொறுப்பற்ற இராணுவமயமாக்கலை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications