சிரியாவில் வந்திறங்கிய ரஷ்ய போர் விமானம்..வான்ட்டடாக வாங்கிக்கொண்ட இஸ்ரேல்! உக்கிரமடையும் போர் களம்
காசா: காசா மீது இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சிரியா மீதும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு ரஷ்யா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரஷ்ய போர் விமானம் சிரியாவில் தரையிறங்கியுள்ளது.
அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு ஆதரவளித்த பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் மிகப் பெரிய துரோகம் செய்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பாலஸ்தீனத்திற்கு வந்தடைந்தார்கள். இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அதில், "ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்து. இதான் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த வரலாறு. இவர்களுடைய மோசமான நிலையை பார்த்த ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது.

அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது மிக மிக சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சொச்சமான நிலப்பரப்பில் காசாவும் ஒன்று. சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட இந்த துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த இடத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் பாலஸ்தீனிய போராளிகள் இதனை தடுத்து வருகின்றனர். எனவே இந்த துண்டு நிலத்தை இஸ்ரேல் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது.
இதற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த அமைப்புகள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தன. அப்படிதான் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 7வது நாளாகா காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இப்படி இருக்கையில் சிரியா மீதும் இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியுள்ளது. அதாவது லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நியாயம் கற்பித்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது முதற்கட்ட தகவலாகும். அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலை ரஷ்யா விமர்சித்திருக்கிறது. இஸ்ரேல் செய்வது முழுமையான இறையான்மை மீறல் என்றும் "இது போன்று செய்வது போரின் தீவிரத்தை இரட்டிப்பாக்கும், இஸ்ரேல் தனது நிலை தெரிந்து நடக்க வேண்டும்" என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா விமானப்படையின் போர் விமானம் சிரியாவின் லடாகியா விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மத்திய தரைக்கடலில் அமெரிக்காவின் போர் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பிரிட்டனின் போர் கப்பலை அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் ரஷ்யா தனது போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications