கொத்து கொத்தாக மடியும் மக்கள்.. இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலுக்கான தீர்வை சொன்ன ரஷ்யா! கலக்கத்தில் மேற்கு
மாஸ்கோ: காசா மீது இஸ்ரேல் மிக மோசமான தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், ஹமாஸ் படையும் முடிந்தவரை எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை முவுக்கு கொண்டு வர சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதுதான் தீர்வு என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
தங்க இடம் தேடி அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை தற்போது ஆக்கிரமித்து இரஸ்ரேலை உருவாக்கியுள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இது அரங்கேறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளுடன் கைகோர்த்து தாக்குதலை நடத்தியிருந்தது. எனவே பொறுத்து பொறுத்து பார்த்த இந்த குழுக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த தொடங்கினர். இது 1980களில் அதாவது இஸ்ரேல் தனது ஆக்கிரப்பை தொடங்கி 40 ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது.

ஆனால் இஸ்ரேலும் அதனுடன் சேர்ந்து மேற்கு நாடுகளும் இந்த விடுதலை அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளன. இதன் பின்னர் இந்த அமைப்புகள் மீதும் பாலஸ்தீனத்தின் மீதும் நடத்தப்பட்ட தக்குதல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தாக்குதலை எதிர்த்து ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அடிக்கடி எதிர் தாக்குதலை தொடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதியன்று எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேலின் பாதுகாப்பு அம்சமான 'அயர்ன் டோம்' ஓவர் லோடாகி சில ஏவகணைகளை தவறவிட்டிருக்கிறது. இது இஸ்ரேலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுறுவிய ஹமாஸ் படையினர், காசாவின் இஸ்ரேலிய ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை தொடுத்திருக்கின்றனர். இவையெல்லாவற்றையும் வெறும் 1,200 ஹமாஸ் வீரர்கள்தான் செய்ததாக அந்த அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் பங்காளி நாடான அமெரிக்கா, தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் இளைய பங்காளியான பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப முயன்று வருகிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இவ்வளவு நடந்த பின்னர் சும்மா இருக்க கூடாது என துருக்கி தனது போர் கப்பலை காசா நோக்கி திருப்பி விட்டிருக்கிறது. ரஷ்யாவும் தனது பங்குக்கு துருக்கிக்கு தனது போர் விமானத்தை அனுப்பியுள்ளது.

ஒரு வேளை அமெரிக்காவோ அல்லது நேட்டோ படைகளோ இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கினால், ஈரான், துருக்கி, ரஷ்யா மற்றும் இதர அரபு நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சண்டையில் குதித்துவிடும். இது மூன்றாம் உலகப்போரையே இழுத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே உலக நாடுகள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா இந்த பிரச்னைக்கு தீர்வு காண சில விஷயங்களை கூறியுள்ளது.
நேற்று நடைபெற்ற காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசிய அவர், "பாலஸ்தீனிய-இஸ்ரேல் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ரஷ்யா முன்மொழிகிறது" என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "அமைதியான வழிகளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால் அதேநேரம் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பது, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதன் மூலமாகதான் அமையும்" என்று கூறியுள்ளார். ஏற்னெவே சீனாவும் சுதந்திர பாலஸ்தீனம்தான் தீர்வு என்று கூறியிருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் இதையே வலியுறுத்தியிருப்பது இஸ்ரேல் மற்றும் அதன் அதரவு நாடுகளான மேற்கு நாடுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications