ஆப்கான் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகள்.. தாலிபான்களை அழைக்கிறது ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தாலிபான்களுக்கும் அழைப்பு விடுக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் தலையெடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தானை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றனார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதலே சர்வதேச நாடுகளில் போக்குகள் மென்மையானதாக இருக்கிறது. குறிப்பாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் தாலிபான்களுடன் இணக்கமான உறவை கடைபிடித்து வருகின்றன.

தாலிபான்களும் சர்வதேச சமூகத்துடன் கை குலுக்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. ஆனாலும் தாலிபான்கள் தங்களது மூர்க்கத்தனமான படுகொலைகளை நிறுத்துவதாக இல்லை.

தாலிபான்களுடன் சீனா, பாக் உறவு

தாலிபான்களுடன் சீனா, பாக் உறவு

தாலிபான்களின் இத்தகைய மனித உரிமை மீறல்களை சர்வதேச நாடுகள் கண்டிக்கவும் செய்கின்றன. ஆனால் சீனாவும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானை முழுமையாக ஆதரித்து நிற்கின்றன. தாலிபான்களும் இந்த இருநாடுகளையும் முழுவீச்சில் நம்புகின்றனர்.

ரஷ்யாவின் மாநாடு

ரஷ்யாவின் மாநாடு

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா சர்வதேச மாநாடு ஒன்றை அக்டோபர் 20-ந் தேதி ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர அமைதி முயற்சிகளுக்கு தாலிபான்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யாவின் சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாக எதனையும் தெரிவிக்கவில்லை.

அன்றைய சோவியத் ரஷ்யா

அன்றைய சோவியத் ரஷ்யா

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்தது முந்தைய சோவியத் ரஷ்யா. 20 ஆண்டுகாலம் ஆப்கானில் நிலை கொண்ட சோவியத் ரஷ்யாவின் படைகளுக்கு எதிராக அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவர்கள்தான் முஜாஹிதீன்கள். 20 ஆண்டுகால கொடூரமான யுத்தத்துக்குப் பின்னர் ஆப்கானை விட்டு சோவியத் ரஷ்யா வெளியேறியது. சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உருவானதுதான் தாலிபான்கள் இயக்கம். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்தது முந்தைய சோவியத் ரஷ்யா. 20 ஆண்டுகாலம் ஆப்கானில் நிலை கொண்ட சோவியத் ரஷ்யாவின் படைகளுக்கு எதிராக அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவர்கள்தான் முஜாஹிதீன்கள். 20 ஆண்டுகால கொடூரமான யுத்தத்துக்குப் பின்னர் ஆப்கானை விட்டு சோவியத் ரஷ்யா வெளியேறியது. சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உருவானதுதான் தாலிபான்கள் இயக்கம்.

ரஷ்யாவின் தீவிர தலையீடு

ரஷ்யாவின் தீவிர தலையீடு

இப்போது சோவியத் ரஷ்யா எனும் சோவியம் ஒன்றியம் தனித்தனி நாடுகளாக சிதறிப் போய்விட்டன. இருந்த போதும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் தஜிகிஸ்தானுடன் இணைந்து ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டிருந்தது. ஆப்கான் எல்லையில் இருநாடுகளும் மேற்கொண்ட இந்த பயிற்சி மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+