திடீரென குலுங்கிய பூமி.. ரஷ்யாவில் 7.1 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கடற்ரை பிராந்தியாமான கம்சட்காவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பிராந்தியமாக கம்சட்கா உள்ளது. இந்த பிராந்தியத்தின் அருகே இன்று காலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா பெனின்சுலா பகுதியின் அருகே நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் முதல் 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை ஜெர்மன் புவிஅறிவியல் ஆராய்ச்சி மையம் பதிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம் சார்பில், ‛‛ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ் - கம்சாட்கி இடையே கிழக்கில் 111.7 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆகவும், பூமிக்கடியில் 10 முதல் 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளது''
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு, சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஜூலை மாதம் இங்கு ரிக்டர் அளவில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அப்போது பசிபிக் பிராந்திய கடல் பகுதி முழுவதுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்காவுக்கு சுனாமி வார்னிங் கொடுக்கப்பட்டது.
ரஷ்யாவின் இந்த பிராந்தியத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அவ்வப்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 1952ம் ஆண்டில் ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்தது. அப்போது 9.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications