பிடியை இறுக்கும் ரஷ்யா.. உக்ரைன் மீது பொழிந்த ட்ரோன் குண்டுகள்! புதின் ருத்ர தாண்டவம்
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தற்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. நேற்றிரவு சுமார் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த போரில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல் இதுதான்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 7 மணி நேரமாக இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதனால் தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜெலன்ஸ்கி, "இது ஒரு மோசமான, தூக்கமில்லாத இரவு" என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம்தான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் டிரம்பை அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. ஏனெனில் நேற்றுதான் டிரம்பும், புதினும் தொலைப்பேசியில் பேசியிருந்தனர். ஆனால், அதே நாளில் ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தில் உடன்பாடு கிடையாது என்பதை தெளிவுப்படுத்தும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
இவ்வளவு பேசியும், மதிக்காமல் தாக்குதல் நடக்கிறது எனில்? நாட்டான்மையாக நான் எதற்கு? என்று டிரம்ப் தரப்பிடமிருந்து கேள்விகள் எழுந்திருக்கின்றன.
போர் நிறுத்தம் குறித்த இதுவரை நடந்த முயற்சிகளில் சில பலனளித்துள்ளன. அதாவது, அமெரிக்கா தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதே நேரம், உக்ரைன்-ரஷ்யா துருக்கி மூலம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதுதான் ஓரளவுக்கு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கைதிகள் பரிமாற்றம், இறந்த போர் வீரர்களின் உடல்களை ஒப்படைப்பது என ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது.
ஆக போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் தலைமையை ஏற்கவில்லை என்பதை இந்த தாக்குதல்கள் தெளிவுப்படுத்தியுள்ளன.
மறுபுறம் இந்த தாக்குதல் உக்ரைனுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதற்கு மற்றொரு காரணம், அமெரிக்கா தனது ஆயுத சப்ளையை நிறுத்தியதுதான். அதாவது போர் நிறுத்தம் கொண்டு வந்த, உக்ரைனில் உள்ள வளங்களில் பாதியை அமெரிக்காவுக்கு எடுத்து செல்ல டிரம்ப் திட்டமிட்டிருந்தார். ஆனால் போர்தான் நிறுத்தப்படவில்லையே. எனவே உக்ரைனுக்கு கொடுத்து வந்த ஆயுதங்களில் பாதியை அமெரிக்கா நிறுத்திக்கொண்டது.
போர்க்களத்தில் நிற்கும் நட்பு நாட்டுக்கு இப்படியா துரோகம் செய்வது? இதனால் ரஷ்யாவின் தாக்குதலை இடைமறிக்க முடியாமல் உக்ரைன் திணறி வருகிறது. இன்னொரு கோணத்திலும் ரஷ்யாவின் தாக்குதலை நாம் புரிந்துக்கொள்ளலாம். அதாவது கடந்த மாதம் ஆபரேஷன் ஸ்பைடர் என்கிற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே ரஷ்யா பதில் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எப்படியோ போர் நின்று அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
போருக்கான காரணம் என்ன?:
உக்ரைன் ஒரு காலத்தில் ஒன்றுபட்ட ரஷ்யாவின் ஒரு பகுதியா இருந்தது. ஆனால், பின்னர் பிரிந்து தனி நாடாக மாறியது. இப்போது அதன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதுதான் பிரச்சனை. பாகிஸ்தான், சீனாவுடன் ராசி ஆகிக்கொண்டு, தனது எல்லையில் சீன படைகளை நிறுத்தினால் நாம் சும்மா இருப்போமா? அதுபோலத்தான் ரஷ்யாவும் நேட்டோவுக்கும், அதில் இணைய முயற்சிக்கும் உக்ரைனுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் போரும் நடக்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications