Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானுக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்த ரஷ்ய அதிபர் புடின்.. அரண்டுபோன டிரம்ப் 'இது மட்டும் நடக்க கூடாது'

Subscribe to Oneindia Tamil

ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முக்கிய தடையாக இருப்பது யுரேனியம், அமெரிக்கா தரப்பில் ஈரான் தன்னிடம் இருக்கும் அனைத்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும், இனி வரும் காலக்கட்டத்தில் அணு ஆயதம் செய்ய மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் என அமெரிக்க தரப்பில் கண்டிஷன் வைக்கப்பட்டு உள்ளது.

இவற்றை ஏற்க முடியாது என அறிவித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய ஈரான், தற்போது அமெரிக்க கடற்படையில் கட்டுப்பாட்டால் புது பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் யுரேனியம் பிரச்சனைக்கு தீர்வை ரஷ்ய தரப்பில் ஈரானுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

Russia Iran Uranium Putin Trump Russia Iran Uranium Deal Putin Peace Proposal Iran Trump Hormuz Blockade Criticism Russia Nuclear Offer Iran Kremlin US Iran Peace Deal russia offer iran enriched uranium putin proposal us iran peace deal kremlin iran uranium host trump hormuz blockade russia criticism russia iran nuclear program talks failed us iran weekend talks strait of hormuz economic impact russia largest nuclear stockpile peskov statement iran uranium russia process iran uranium fuel iran rejects russia uranium offer global markets hormuz blockade putin conversations regional states iran war peace deal russia russia us iran future agreement

ரஷ்ய அதிபர் புடின் ஐடியா

ரஷ்யா, ஈரான் நாட்டிடம் இருக்கும் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்று கிரெம்லின் அதாவது ரஷ்ய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்படும் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையான பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. இந்தப் போர் பிப்ரவரி இறுதியில் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், உலகப் பொருளாதாரத்தில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் புதிய திட்டம்

ரஷ்யா உலகிலேயே அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு. அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புடின், அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யா பெற்றுக்கொள்ளும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், இந்த திட்டம் இன்னும் பேச்சுவாத்தை நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த திட்டம் அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் திமித்ரி பெஸ்கோவ் விளக்கினார்.

ரஷ்யாவின் நீண்டகால பங்கு

பல ஆண்டுகளாக ரஷ்யா ஈரானின் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஈரானில் உள்ள அதிகப்படியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுமதி செய்து, அதை செயலாக்கி, அணு மின் நிலையங்களுக்கான அணு எரிபொருளாக மாற்றி திருப்பி அனுப்ப ரஷ்யா தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், ஈரான் இந்த சலுகையை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யாவின் இந்த முயற்சி, ஈரான் அணு திட்டத்தை அமைதியான வழியில் கட்டுப்படுத்த உதவும் என்று பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் முடக்கம்

மேலும் திமித்ரி பெஸ்கோவ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதை குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தின் மிக முக்கிய பாதையாகும். இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்த ஹார்முஸ் பாதை முடக்கம் ஏற்கெனவே உலகப் பொருளாதாரத்தில் பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நீண்டகாலமாக தொடர்வதால், உலகப் பொருளாதாரம் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. ரஷ்யாவின் இந்த புதிய திட்டம், அமைதி ஒப்பந்தத்துக்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மீண்டும் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை மேற்கொண்டால் ரஷ்யாவின் திட்டத்தை முன்வைத்து ஈரான் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

ஆனால் இது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக மாறும், ஈரான் நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவுக்கு வழங்குவதை ஒருபோதும் டிரம்ப் ஏற்காது. இதனால் போர் பதற்றம் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆனால் மோசமான தாக்குதல் வாய்ப்பு குறைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+