தைவானில் அமெரிக்கா தலையீடு.. சீனாவுக்கு ஆதரவாக அடேங்கப்பா இத்தனை நாடுகள் அணிவகுப்பா?
பெய்ஜிங்: தைவானில் அமெரிக்காவின் தன்னிச்சையான தலையீட்டை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Recommended Video
தைவான், தனிநாடாக இருந்தாலும் சீனாவோ தங்களது ஒருங்கிணைந்த மாகாணம் என்கிறது. சீனாவின் நிலைக்கு எதிராக தைவான் தனிநாடுதான் என்கிறது அமெரிக்கா.

தைவான் விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகாலம் காத்திரமான நடவடிக்கைகளை காட்டாத அமெரிக்கா, தற்போது திடீரென தலையிட தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி, சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இது சீனாவை ஆத்திரமூட்டியது. இதனால் தைவான் பிராந்தியத்தில் அமெரிக்கா போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்பிரச்சனை தொடர்பாக ஐ.நா. பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் டுஜாரிக் வலியுறுத்தி உள்ளார். பெலோசியின் தைவான் பயணம் குறித்து பேசுகையில் அவர் மீண்டும் இதனை சுட்டிக்காட்டினார்.
ஐநாவின் இந்த நிலைப்பாட்டின் மூலம் ஐ.நா. அமைப்பில் சீனாவின் ஒரேயொரு சட்டப்பூர்வ அரசு; தைவானுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அந்நாடு கருதுகிறது. இதனிடையே ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், வடகொரியா, கியூபா, வெனிசுலா, சிரியா, பாலஸ்தீனம், நிகரகுவா, கம்போடியா ஆகிய நாடுகள் தைவானில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.
உக்ரைன் விவகாரத்தில் கூட ரஷ்யாவுக்கு இத்தனை நாடுகள் பகிரங்கமாக ஆதரவு தராத நிலையில் சீனாவுக்கு ஆதரவாக பல நாடுகள் வரிந்து கட்டி நிற்கின்றன.
இதனிடையே சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஷே ஃபாங், நேற்று சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் பேர்ன்ஸை வரவழைத்தார். அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி, தைவான் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டது குறித்து சீன அரசின் சார்பில் ஷே ஃபாங் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
மேலும் சீன தைவானிலிருந்து சீனா பெருநிலப்பகுதிக்கு அனுப்பப்படும் பப்பாளி, எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களுக்கும், ஹைல்டெல், ஹோஸ் மாக்கரெல் ஆகிய இரு வகை மீன்களுக்கும் சீனா தடை விதித்துள்ளது. தைவானுக்கான இயற்கை மணல் ஏற்றுமதியும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications