இதுதான் புடின்! மேற்கு உலகமே எதிர்த்தும் சப்போர்ட்டை பாருங்க.. அசரடித்த ரஷ்யா.. வியக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புடினுக்கான ஆதரவு அதிகரித்து உள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவாரசியமான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் வேகம் கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் சில நகரங்களில் மட்டும் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த போரில் ரஷ்ய தரப்பிற்கு எதிர்பார்த்ததை விட அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக ரஷ்யாவே ஐநா பொது சபையில் தெரிவித்துள்ளது. இந்த போரில் இதுவரை உக்ரைன் கையே ஓங்கி உள்ளது.

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைனின் முக்கியமான நகரங்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. உக்ரைனின் வான்வெளி பகுதியை ரஷ்யாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரஷ்யா கடுமையாக திணறி வருகிறது. ஏன் ரஷ்யாவின் ராணுவ வீரர்களே தங்கள் நாட்டு அரசு மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூட மேற்கு உலக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதாவது அதிபர் புடினுக்கு எதிராக ரஷ்யாவில் மக்கள் கோபத்தில் இருப்பதாக மேற்கு உலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

ரஷ்யா கணிப்பு

ரஷ்யா கணிப்பு

ஆனால் ரஷ்யாவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்று வேறு மாதிரியான முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் Russian Public Opinion Research Center (VTsIOM) என்ற அமைப்பு தான் அங்கு அதிபருக்கான் அப்ரூவல் ரேட்டிங் குறித்த கருத்து கணிப்புகளை எப்போதும் வெளியிடும். அதிபருக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிடும்.

 அதிபர் புடின்

அதிபர் புடின்

இந்த நிலையால் ரஷ்ய அதிபர் புடின் பற்றி வெளியிட்டுள்ள கணிப்பில் அவரின் அப்ரூவல் ரேட்டிங் 67.2 சதவிகிதத்தில் இருந்து 81.6 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. அதாவது பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கிய நாளில் அவருக்கான மக்கள் ஆதரவு 67.2 சதவிகிதமாக இருந்தது. தற்போது அவருக்கான ஆதரவு 81.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக ரஷ்ய அதிபர் புடினை 24.4 சதவிகிதம் பேர் எதிர்த்து உள்ளனர்.

 எதிர்ப்பு குறைந்தது

எதிர்ப்பு குறைந்தது

ஆனால் இந்த எதிர்ப்பு 12.9 சதவிகிதமாக் குறைந்துள்ளது. சரியாக போர் நடக்கும் கடந்த ஒன்றரை மாத காலகட்டத்தில் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டு உள்ளது. 2014ல் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிய போதும் புடினின் ஆதரவு பெருகியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் புடினுக்கு எதிராக ரஷ்யாவில் மக்கள் புரட்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்தான் புடின் தனக்கான ஆதரவை போர் மூலமே உயர்த்தி இருக்கிறார். பொதுவாக போர் காலங்களில் ஒரு நாட்டு அதிபருக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+