அமெரிக்கா மிரட்டினா பயந்துருவோமா? இந்தியா வரும் புதின்.. மோடியுடன் சேர்ந்து செய்யும் பெரிய சம்பவம்
மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை தர உள்ளார். இதனை ரஷ்ய வெளியுறவுத்துத்துறை அமைச்சர் செர்கே லாவ்ராவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த வருகையின்போது இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட உள்ளது. இதுன்மூலம் அமெரிக்காவை ஓரம்கட்டி நாங்கள் ரஷ்யாவுடன் தான் இருப்போம் என்பதை இந்தியா வெளிப்படுத்த உள்ளது. இதனால் புதினின் இந்த வருகையை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.
நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் நீண்டகால உறவு உள்ளது. காலம் காலமாக நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. தற்பாதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயும் நல்ல உறவு என்பது இருந்து வருகிறது.
இதற்கிடையே தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த போரை பொறுத்தவரை நம் நாடு விரும்பவில்லை. பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொடர்ந்து மோடி வலியுறுத்தி வருகிறார். அதேபோல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் பேச்சுவார்த்தை வழியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நேரில் வலியுறுத்தி உள்ளார்.

மோடி அழைப்பை ஏற்ற புதின்
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கிய பிறகு இருநாடுகளுக்கும் பிரதமர் மோடி விசிட் செய்தார். விளாடிமிர் புதின், விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
தற்போது 3வது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது நம் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று புதினுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை புதின் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தியா வரும் புதின்
அதன்படி ரஷ்ய அதிபர் புதின் நம் நாட்டுக்கு வருகை தர உள்ளார். இதனை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ராவ் உறுதி செய்துள்ளார். ரஷ்யா சார்பில் ரஷ்யா சர்வதேச விவகாரம் தொடர்பான கவுன்சில் சார்பில் ‛‛ரஷ்யா மற்றும் இந்தியா'' என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் செர்கே லாவ்ராவ் பங்கேற்று பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛விளாடிமிர் புதின் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக இந்தியா பிரதமராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் ரஷ்யா வந்தார். விளாடிமிர் புதினை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். இப்போது எங்களுக்கான நேரம் வந்துள்ளது. விளாடிமிர் புதின் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது'' என்றார்.
இந்தியா - ரஷ்யா உறவில் மைல்கல்
இருப்பினும் விளாடிமிர் புதின் இந்தியா வருவதற்கான மாதம், தேதியை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் விரைவில் விளாடிமிர் புதின் இந்தியா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு விளாடிமிர் புதின் நம் நாட்டுக்கு முதல் முறையாக வருகை தந்ததாக இருக்கும். மேலும் இந்த வருகை என்பது இந்தியா - ரஷ்யா இடையேயான உறவில் புதிய மைல்கல்லாக இருக்கும்.
ஏனென்றால் இந்தியா - ரஷ்யா இடையே நீண்டகால உறவு என்பது உள்ளது. நம் நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகமாக வாங்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் புதிய பொருளாதார வழித்தடம் 2030 என்ற பெயரில் இந்தியா - ரஷ்யா இடையே சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
100 பில்லியன் டாலர் வர்த்தகம்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தான். தற்போது இருநாடுகள் இடையேயான வர்த்தகம் என்பது ஆண்டுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உள்ளது. இதனை இன்னும் 40 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பெரிய அடியை கொடுக்கும். ஏனென்றால் அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் நம்நாட்டுக்கு அதிக வரி விதிப்பதாக கூறி உள்ளார். ஏப்ரல் 2 முதல் வரியை உயர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கு எப் 35 ரக போர் விமானங்களை வழங்குவதாக அவர் கூறினார்.
டிரம்ப் போடும் கணக்கு
அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானம் என்பது 5 ம் தலைமுறை வகையை சேர்ந்தது. நம் நாட்டில் 5 ம் தலைமுறை விமானம் என்பது இல்லை. ரஃபேல் எனும் 4.5ம் தலைமுறை விமானம் தான் உள்ளது. இதனால் இது நல்ல ஆஃபராக பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னணியில் டிரம்ப் முக்கிய கணக்கை போட்டுள்ளார். அதாவது எஃப் 35 ரக போர் விமானங்கள் மட்டுமின்றி பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிடம் இருந்து அதிகப்படியான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும். இது இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் என்று கூறியிருந்தார்.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை ஒப்பிடும்போது அமெரிக்காவில் இருந்து குறைந்த அளவில் தான் நம்நாடு இறக்குமதி செய்கிறது. இதனை ஈடுசெய்ய டிரம்ப் நினைக்கிறார். இதனால் நம் நாட்டிடம் இருந்து அதிகமான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். நம் நாட்டை பொறுத்தவரை ரஷ்யாவிடம் தான் அதிகமான ராணுவ தளவாடங்கள் வாங்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவை கைவிட்டு அமெரிக்கா பக்கம் சாய வேண்டும் என்று நம் நாட்டுக்கு மறைமுகமாக டிரம்ப் வேண்டுகோள் வைத்தார்.
அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் சொன்னது என்ன?
முன்னதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் இதுபற்றி கூறினார். அப்போது ‛‛இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் ராணுவ தளவாட வர்த்தகத்தில் வரலாற்று ரீதியிலான உறவு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தான் இந்தியா அதிகமான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. இனி இந்தியாவுக்கு ரஷ்யா வேண்டாம். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம். அதோடு ரஷ்யாவுக்கு மாற்றாக இந்தியாவுக்கு நவீன அமெரிக்கா பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்கள், ஆயுதங்களை வழங்க தயாராக இருக்கிறோம். இதன்மூலம் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு என்பது பலமானதாக இருக்கும்'' என்றார்.
ஆனால் நம் நாடு எஃப் 35 ரக போர் விமானங்கள் உள்பட எந்த ராணுவ தளவாடங்களையும் வாங்குவதாக இன்னும் அமெரிக்காவிடம் கூறவில்லை. இப்படியான சூழலில் தான் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான ஆண்டு வர்த்தகம் 60 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரிக்க புதின் - மோடி சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வர்த்தக வரி உள்பட எப்படி மிரட்டி பார்த்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குவோம் என்பதை நம் நாடு அமெரிக்காவுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமையும். அதோடு நம் நாட்டின் இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவுக்கு பெரிய அடியாக பார்க்கப்படும்.
அமெரிக்காவுக்கு விழும் அடி
ஏனென்றால் நம் நாடு எஃப் 35 ரக போர் விமானங்கள் உள்பட எந்த ராணுவ தளவாடங்களையும் வாங்குவதாக இன்னும் அமெரிக்காவிடம் கூறவில்லை. இப்படியான சூழலில் தான் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான ஆண்டு வர்த்தகம் 60 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரிக்க புதின் - மோடி சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது நடக்கும் பட்சத்தில் வர்த்தக வரி உள்பட எப்படி மிரட்டி பார்த்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குவோம் என்பதை நம் நாடு அமெரிக்காவுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமையும். அதோடு நம் நாட்டின் இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவுக்கு பெரிய அடியாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications