மெட்டா அதிகாரியை "வான்டட்" லிஸ்டில் வைத்த ரஷ்யா.. கிரிமினல் விசாரணை தொடக்கம்.. என்னாச்சு
மாஸ்கோ: மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார்.
உலக அளவில் மிகெப்பெரும் சமூக வலைத்தள ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக் , இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா. பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது அலுவலகத்தை வைத்துள்ளது. அந்த வகையில், ரஷ்யாவிலும் மெட்டா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.

எனினும், கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரமிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது குறித்து ரஷ்யா தெரிவிக்கவில்லை. மெட்டா நிறுவனத்தின் ஊழியர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு எதிராக கிரிமினல் விசாரணையை தொடங்கியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் விசாரணைக்குழு தெரிவித்து இருந்தது. கிரிமினல் விசாரணை எதிர்கொண்டுள்ள நபர்களில் ஆண்டி ஸ்டோனும் இடம் பெற்று இருந்தார்.
மெட்டா நிறுவனத்தின் தளங்களில் ரஷ்யா ராணுவத்திற்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி பயங்கரவாத செயல்களை தூண்டியதாக விசாரணைக்குழு குற்றம் சாட்டியிருந்தது. எனவே இது தொடர்பாகத்தான் ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக விசாரணையை தொடங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த தவறான தகவல்களை கூகுள் நிறுவனம் அழிக்க தவறியதாகவும் அதற்காக 4 மில்லியன் ரபுள்ஸ் (டாலர் 44,582) அபராதமும் விதித்து இருந்தது. இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு மூன்று நாட்களே ஆன நிலையில் தற்போது மெட்டா நிறுவனத்தின் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications