உக்ரைன் போர்.. "சாரி, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது.." ரஷ்யா திட்டவட்டம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் கடந்த ஜனவரி மாதம் முதலே பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்தது.

இந்தப் போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றே முதலில் பலரும் நினைத்தனர். இருப்பினும், இப்போது இந்தப் போர் 4ஆவது வாரமாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ச்சியாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரு நாடுகளும் தீவிர பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் 10ஆம் தேதி இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதிலும் கூட எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், உக்ரைன் போர் தொடர்ந்தே வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

 சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

இந்தச் சூழலில் இது தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்திலும் கூட வழக்கு தொடரப்பட்டது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களை குறிவைத்து இன அழிப்பில் உக்ரைன் ஈடுபடுவதாகவே புதின் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், அதுபோல எதுவும் உக்ரைனில் நடைபெறவில்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவதாகச் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பு

தீர்ப்பு

அதில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யாவுக்குச் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் ராணுவ பயன்பாடு என்பது மிகவும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தலைமை நீதிபதி ஜோன் டோனோகு தெரிவித்தார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தனது போர் நடவடிக்கையைத் தொடரக்கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 ஏற்க முடியாது

ஏற்க முடியாது

இந்நிலையில், ஐநா நீதிமன்றத்தில் தீர்பை நிராகரிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இந்த தீர்ப்பை ரஷ்யாவால் ஏற்க முடியாது. இரு தரப்பும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தீர்ப்பை அமல்படுத்த முடியும். இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அமல்படுத்தவும் முடியாது. இந்த விவகாரத்தை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வரை உக்ரைன் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+