ரஷ்யாவில் இடைவிடாது தொடரும் பாதிப்பு: ஒரே நாளில் 40,993 பேருக்கு பாதிப்பு; 1,158 பேர் உயிரிழப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு இடைவிடாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் ஒரே நாளில் 40,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 1,158 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் நேற்று 3,44,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4,798 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேலும் 2,91,664 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,74,81,233 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 50,15,253 ஆக உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,91,664.

ரஷ்யாவில் பாதிப்பு அதிகம்
உலக அளவில் ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 40,993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இங்கு 1,158 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27,115.

இங்கிலாந்து, அமெரிக்கா
ரஷ்யாவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,877. ஆனால் இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இங்கிலாந்து நேற்று 74 பேர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் நேற்று 35,696 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஒரே நாளில் 341 பேர் கொரோனாவால் மரணித்தனர்.

பிற நாடுகளில் பாதிப்பும் மரணங்களும்
துருக்கியில் 23,948; உக்ரைனில் 17,430; ஜெர்மனியில் 13,912; இந்தியாவில் 12,935 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ருமேனியாவில் 394; உக்ரைனில் 336; மெக்சிகோவில் 325; இந்தியாவில் 251 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.
Recommended Video

கேரளாவில் அதிகம்
இந்தியாவில் கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 7,167 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. மேலும் 167 பேர் நேற்று மட்டும் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தனர். கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கு 20 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தமிழகம், மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு சற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications