உக்ரைன் மீதான ரஷ்யாவின் இடைவிடாத யுத்தம்... அணு ஆயுதப் போர் எனும் பேரழிவை நோக்கி நகருகிறதா?
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் இடைவிடாத யுத்தம் அணு ஆயுதப் போர் எனும் அடுத்த உலகப் பேரழிவை நோக்கி நகரக் கூடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறிய பின்னர் அமெரிக்கா தன்னை ஏகாதிபத்திய வல்லரசாகவே நினைத்துக் கொண்டு யுத்த களங்களை உருவாக்கியது. 1990களில் பாரசீக வளைகுடா யுத்தம், 1991-ல் சேர்பியா யுத்தம், 2001-ல் ஆப்கான் மீதான படையெடுப்பு, 2003-ல் மீண்டும் ஈராக் மீது யுத்தம், 2011-ல் லிபியா, பின்னர் சிரியா யுத்தம் என அமெரிக்கா இடைவிடாது சர்வதேச நாடுகளில் யுத்தத்தை முன்னெடுத்துக் கொண்டே இருந்தது.
அமெரிக்காவின் இத்தனை யுத்தங்களும் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. இருந்தபோதும் ஏதோ வகையில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவின் யுத்த போக்குக்கு எந்த பதிலடியும் தராமல் சில எதிர்வினைகளை மட்டும் காட்டி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் இத்தனை யுத்தங்களில் இருந்தும் முற்றிலும் வேறானதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இருந்து வருகிறது.

ரஷ்யாவின் நோக்கம் என்ன?
உக்ரைன் மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது; அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது என்பதாகத்தான் ரஷ்யாவின் யுத்தம் தொடருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்கிறது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த யுத்தத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் படைகள் நேரடியாக களமிறங்கும் என எதிர்பார்த்தது உக்ரேன். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது அந்த தடை, இந்த தடை என்றெல்லாம் அறிவிக்கின்றன. ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால் வெளிப்படையாக எந்த ஒரு நாடும் உக்ரேன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட இறங்கவில்லை.

சிரியா வீரர்கள்
அதேநேரத்தில் ரஷ்யா தமது கூட்டாளியான சிரியாவில் இருந்து ராணுவ வீரர்களை உக்ரைனில் களமிறக்க போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ரஷ்யாவின் இந்த யுத்தத்தில் சீனா, வடகொரியா ஆகியவை ரஷ்யாவின் அணியில் உள்ளன. உக்ரைனில் உள்ள அணு உலைகளையும் ரஷ்யா இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகிறது. அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும் ரஷ்யாவின் நிபந்தனை.

அணு ஆயுதப் போர்?
இப்போதைய நிலையில் உலக நாடுகள் பலவும் அணு ஆயுதங்களை கையில் வைத்திருக்கின்றன. ரஷ்யாவின் யுத்த முன்னெடுப்பை முடிவுக்கு கொண்டு வர அணு ஆயுதங்களை ஏவவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சாது. ரஷ்யாவும் பதிலடியாக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம். கடந்த கால உலகப் போர்கள் சாம்ராஜ்ஜியங்களை முடிவுக்கு கொண்டு, ஏகாதிபத்தியங்களை முடிவுக்கு கொண்டு ஜனநாயக காற்றை வீச செய்திருக்கின்றன. ஆனால் இதற்கு பல லட்சம் அப்பாவி பொதுமக்கள் பலி கொடுக்க நேரிட்டிருக்கிறது.
Recommended Video

பேரழிவு அபாயம்?
இப்போதைய உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தமும் அணு ஆயுதப் போராக விரிவடையக் கூடும் என்றே கூறப்படுகிறது. அப்படி அணு ஆயுத போராக விஸ்வரூபமெடுத்தால் மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவைத்தான் சந்திக்க நேரிடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
-
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications