அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரஷ்யா.. குருவி போல் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-16 போர் விமானம்!
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியுள்ள இந்த சம்பவம் உக்ரைனுக்கும், அதற்கு ஆதரவளித்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் அதிநவீன எஸ்-300 வான் வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி அமெரிக்காவின் இந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 3 ஆண்டுகள் முடிந்து 4ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்
இந்நிலையில், அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் எஃப்-16 போர் விமானங்களை பயன்படுத்த தொடங்கியது. ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக 87 எஃப்-16 விமானங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை 44 விமானங்கள் மட்டுமே உக்ரைனுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
எஃப்-16 போர் விமானம்
தற்போது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம், எஃப்-16 வழங்க தொடங்கியதிலிருந்து போர்க் களத்தில் இழக்கப்பட்ட நான்காவது விமானம் என ரஷ்யா கூறியுள்ளது. ஷ்ய அரசு தொலைக்காட்சியான ரஷ்யா-1க்கு அளித்த பேட்டியில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய தளபதி, எஃப்-16 போர் விமானங்கள் மிகவும் சவாலான இலக்குகள் என்றாலும், அவற்றையும் வீழ்த்த முடியும் என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார்.
எஸ்-300 பாதுகாப்பு அமைப்பு
இந்த தாக்குதலுக்காக முன்கூட்டியே நீண்ட காலம் திட்டமிடப்பட்டதாகவும், முதல் ஏவுகணை விமானத்தை கடுமையாக சேதப்படுத்தியதாகவும், இரண்டாவது ஏவுகணை அதன் முழுமையான அழிவை உறுதி செய்ததாகவும் கூறியுளார். "இந்த விமானங்களை சுட முடியாது என்று எதிரிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அவையும் மற்ற விமானங்களைப் போலவே வானிலிருந்து விழுகின்றன" என்று அவர் கூறியது கவனம் பெற்றுள்ளது.
விளாடிமிர் புதின்
இந்த நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்படும் மேற்கு நாடுகளின் ஆயுத உதவிகள் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, எஃப்-16 போன்ற மேம்பட்ட போர் விமானங்களும் ரஷ்யாவின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது. மொத்தத்தில், இந்த சம்பவம் ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் கடுமையான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இந்த சம்பவத்திற்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
நேட்டோ ஆயுத உதவி
அதற்கு பதிலடியாக, ரஷ்யா 'ஒரெஷ்னிக்' என்ற அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கக்கூடியது என்றும், அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தாக்குதலில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படவில்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய தாக்குதல்கள் உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இதில் நீண்ட தூர ட்ரோன்கள், நிலம் மற்றும் கடல் வழி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை












Click it and Unblock the Notifications