ஒரே நொடி.. பூச்சிகளை போல சரிந்த ட்ரோன்கள்.. 3 நாட்கள் முடங்கிய உக்ரைன்.. பின்னணியில் டிரம்ப்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் சாட்டிலைட் இணைய சேவையான ஸ்டார்ஷீல்டு இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பால், உக்ரைன் ரூ.9 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ட்ரோன்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்ய ராணுவம் மீதான தாக்குதல்களை உக்ரைன் படைகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் பெரும்பாலான மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அமெரிக்காவும் கூட உக்ரைனுக்கு சப்போர்ட் செய்தே வருகிறது. டிரம்ப் அங்கு அதிபரான பிறகு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட உக்ரைனுக்கான உதவிகள் தொடர்கிறது.

Russia war Ukraine Ukraine Loses Drones

உக்ரைன்

உக்ரைனுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி வரும் நிலையில், இணைய சேவைக்கும் கூட அமெரிக்க நிறுவனங்களையே உக்ரைன் நம்பி இருக்கிறது. அப்படி உக்ரைன் நம்பி இருக்கும் முக்கியமான இணைய சேவை என்றால் அது ஸ்டார்ஷீல்டு. இந்த ஸ்டார்ஷீல்டு தான் திடீரென செயலிழந்து உக்ரைனுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. இதனால் பல நூறு டிரோன்கள் நாசமாகியுள்ளது. சுமார் 9 கோடி ரூபாய்க்கு மேல் உக்ரைனுக்கு நஷ்டம். இது ஒரு நாட்டிற்கு சிறிய தொகை போல இருந்தாலும் போர் காலத்தில் எல்லாமே முக்கியமானதாகவே இருக்கிறது.

பூச்சி போல கீழே விழுந்தன

ரஷ்ய இலக்குகளை நோக்கி பறந்த ட்ரோன்களின் வீடியோ இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவ தளபதி ஒலே தெரிவித்துள்ளார். ஸ்டார்ஷீல்டு இணைப்பை இழந்ததால் பல ட்ரோன்கள் கீழே விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் ரஷ்யாவின் கட்டளை மையங்கள், எரிபொருள் சேமிப்பு மையங்கள் மீதான தாக்குதல்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், உக்ரைன் வீரர்களை பாதுகாக்கவும் முக்கியமானவை. ஆனால், அதிலேயே இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

100 மைல் வேகம்

தொடக்கத்தில் மணிக்கு 40 மைல் வேகத்தில் சென்ற ட்ரோன்கள்கூட இணைப்பை இழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலைமை மேம்பட்டாலும், மணிக்கு 100 மைல் வேகத்தை கடந்தால் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்சினை நீடிக்கிறது. இது தொடர்பாக பிரிகேடியர் ஜெனரல் ஆண்ட்ரி பிலெட்ஸ்கி கூறுகையில், "முன்பு ஸ்டார்ஷீல்டு இணைப்புடன் ட்ரோன்கள் மணிக்கு 250 மைல் வேகத்திலும் செயல்பட்டன. ஆனால், இப்போது அவ்வளவு வேகமாக இயக்க முடிவதில்லை. இந்த வேகக் கட்டுப்பாடுகள் ரஷ்ய ட்ரோன்களை இடைமறிக்கும் உக்ரைனின் வான் பாதுகாப்பையும் பாதிக்கிறது" என்றார்.

உக்ரைன் ராணுவ அதிகாரி யூரி புடுசோவ் இது தொடர்பாக, "எங்களால் திட்டமிட்டு தாக்குதலை நடத்த முடியவில்லை. இது ரஷ்யாவுக்கு தேவையான ரெஸ்ட் காலத்தை கொடுத்திருக்கிறது. இது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. ட்ரோன்களின் இழப்பை தாண்டி, இன்னும் அதிகமான ரத்தம் சிந்தப்படும். எங்கள் வீரர்கள் உயிருக்கே ஆபத்தாகிறது" என்றார்.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், போர் ஒப்பந்தத்திற்கு உக்ரைனை நிர்பந்திக்கவும் இந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா திட்டமிட்டு விதித்து இருக்கலாம் என உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என டிரம்ப் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங்க் மூலம் சாட்டிலைட் இணைய சேவையை வழங்கி வருவது அனைவருக்கும் தெரியும். ஸ்டார்லிங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்கப்பட்டு வரும் சூழலில், ஸ்டார்ஷீல்டு என்ற பெயரில் ராணுவத்திற்கான இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதில் சிக்கல் ஏற்பட்டதே இப்போது விவாதமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+