ஐரோப்பாவில் இருந்து உங்க அணு ஆயுதத்தை தூக்கிட்டுப் போங்க.. அமெரிக்காவுக்கு ரஷ்யா மிரட்டல்
மாஸ்கோ: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்கா தமது அணு ஆயுதங்களை அகற்ற வேண்டும் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு அமெரிக்கா ஆதரவு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

கனடா, ஜப்பான்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் அதிபர் புதின் மற்றும் அமைச்சர்கள், ரஷ்யாவின் மத்திய வங்கி ஆகியவற்றுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.

பிரான்ஸ் பிரிட்டன்
ரஷ்யா மீதான மேற்குலகத்தின் தடைகளால் அந்த நாட்டின் பொருளாதாரமே நாசமாகிவிடும் என சபித்துள்ளது பிரான்ஸ். உலக ரக்பி விளையாட்டுகளில் பங்கேற்கவும் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க தயார் என பிரிட்டன் அறிவித்துள்ளது.

ரஷ்யா வார்னிங்
உக்ரைனுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவது என இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்கா சார்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப் போவதாக அறிவித்துள்ளன. அப்படி ஆயுதங்கள் வழங்கினால் விளைவுகளுக்கு அந்தந்த நாடுகள்தான் பொறுப்பு என்கிறது ரஷ்யா.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
மேலும் உக்ரைனில் இலக்கை அடையும் வரை யுத்தம் தொடரும் என்கிறது ரஷ்யா. இந்த நிலையில் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்கா தமது அணு ஆயுதங்களை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications