மக்கள் வெளியேறுவதை தடுக்கும் ரஷ்ய படைகள்... சமாதானத்திற்கு தயார் என ஜெலன்ஸ்கி அறிவிப்பு
மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷ்ய ராணுவம் தடுத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்
கீவ்: மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷ்ய ராணுவம் தடுத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். தெற்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகருக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளது என்று அவர் கூறினார். ஆனாலும் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ரஷ்யாவுடன் தொடர்ந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 13 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது. இந்த 13 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷ்யா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் இறங்கியுள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் வலுத்திருக்கிறது. போரினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. ரத்த ஆறு ஓடுகிறது.

15 லட்சம் அகதிகள்
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 15 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். போரில் இருந்து தப்பித்து 15 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின், ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.

3ஆம் கட்ட பேச்சுவார்த்தை
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தளவாடங்களை மாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், நிலைமையை கணிசமாக மேம்படுத்தும் முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை.

ஜெலன்ஸ்கி பேட்டி
இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷ்ய ராணுவம் தடுத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். தெற்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகருக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளது என்று அவர் கூறினார். ஆனாலும் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ரஷ்யாவுடன் தொடர்ந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
Recommended Video

உலக வங்கி நிதி உதவி
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உருக்குலைந்து போயுள்ள உக்ரைனுக்கு உதவ 723 மில்லியன் டாலர் நிதி உதவியை உலக வங்கியின் இயக்குநர்கள் குழு அங்கீகரித்ததாக அந்த நிறுவனம் திங்களன்று அறிவித்தது. இந்த தொகுப்பு பல நாடுகளில் இருந்து கடன்கள், கடன் உத்தரவாதங்கள், மானியங்கள் மற்றும் இணையான நிதியுதவி ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டு வருகிறது, உக்ரைனில் மருத்துவமனை ஊதியங்கள் மற்றும் சமூகத் திட்டங்கள் போன்ற முக்கியமான சேவைகளுக்கு இது உதவும் என்று உலக வங்கி கூறுகிறது.












Click it and Unblock the Notifications