என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
குளியல் தொட்டி முழுவதும் நாணயங்களை நிரப்பி இளைஞர் ஐபோன் வாங்கினார்.
Recommended Video

மாஸ்கோ: இந்த ஐபோன் வந்தாலும் வந்தது, தலைகீழாக நின்றுகூட இளசுகள் இதை வாங்கி விடுகிறார்கள்!
இந்த ஐபோன் வைத்து கொண்டால் கெத்து என்பதால், இதற்காக வீடு உள்ளிட்ட பொருட்களை விற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஏன்? கிட்னியையே விற்ற கதைக்கூட நமக்கு தெரியும்.
இப்படித்தான் ஒரு இளைஞர் இந்த ஆப்பிள் ஐ-போனை வாங்க ஆசைப்பட்டார். அவர் மாஸ்கோவை சேர்ந்தவர். எப்படியாவது ஐபோன் வாங்கியே தீருவது என்று செல்போன் கடைக்கு போனார்.

குளிக்கும் தொட்டி
ஒரு வணிக வளாகத்தில்தான் அந்த ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் கடை இருக்கிறது. செல்போனை வாங்க இளைஞருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள். இவர்கள் வந்தால் பரவாயில்லையே.. கூடவே குளிக்கும் தொட்டியான டப்-ஐ தூக்கி கொண்டு போனார்கள்.

முழுசும் சில்லறைகள்
இப்படி டப்புடன் உள்ளே வந்ததை பார்த்ததும் செக்யூரிட்டிகள் கடைக்குள் விடவில்லை. வழியிலேயே மடக்கி தடுத்தனர். அதற்கு அந்த இளைஞர், செல்போன் வாங்க தான் வந்திருக்கிறோம்,அதற்கு தான் இந்த காசை கொண்டு வந்தோம் என்றனர். அப்போதுதான் அங்கிருந்தவர்கள் எட்டி பார்த்தால் குளியல் தொட்டி முழுசும் சில்லறை காசுகளாக நிறைந்திருந்தன.

வாடகை வண்டி
அந்த இளைஞர் செல்போன் வாங்குவதற்காகவே இந்த காசை சேமித்து வைத்திருந்தாராம். இந்த ஆப்பிள் ஐபோனை வாங்க பல வருடங்களாகவே இதை சேர்த்து வந்திருக்கிறார் இளைஞர். அதைதான் ஒரு வண்டியை பிடித்து தூக்கி போட்டு கடைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஐபோன் வாங்கும் அளவுக்கு தேவையான நாணயங்களைதான் இளைஞர் விவரமாக கொண்டு வந்திருந்தார்.
ஐபோன் எக்ஸ்எஸ்
தொட்டி நிறைய காசை பார்த்தபிறகு அவரை ஷோ-ரூமிற்குள் உள்ளே விட்டார்கள். பிறகு அந்த காசை எப்போது எண்ணி முடித்தார்களோ, எத்தனை பேர் சேர்ந்து எண்ணினார்களோ தெரியாது... கடைசியில் ஐபோன் எக்ஸ்எஸ் செல்போனை வாங்கிவிட்டார் இளைஞர்!!

ஒரே சந்தோஷம்
முகமெல்லாம் என்னவோ சாதித்ததை போன்ற ஒரு பூரிப்பு... தான் ஐபோனை வாங்க சென்றதும் முதல்வேலையாக தான் எப்படி அந்த போனை வாங்கினார் என்பது உட்பட வீடியோ இன்ஸ்டாகிராமில் போட்டுவிட்டார். அந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications