முன்னேறவும் முடியல, பின்வாங்கவும் முடியல.. உக்ரைனில் திடீரென ஸ்தம்பித்த ரஷ்ய ராணுவம்! இதுதான் காரணம்
கீவ்: உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்யா ராணுவம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ படைகளில் உக்ரைன் சேரக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும், கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும் என்றும் புதின் வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும், இந்தக் கோரிக்கைகளை உக்ரைனும் சரி, நேட்டோவும் சரி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த புதின் கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போரை ஆரம்பிக்க புதின் உத்தரவிட்டார்.

தொடரும் போர்
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் ஆரம்பித்த இந்தப் போர் 11 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவத்திற்கு இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த இதுவரை நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதேபோல உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளில் நிறுத்தவில்லை.

ரஷ்ய படைகள்
இதனிடையே உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, தலைநகர் கீவ்வை கைப்பற்றினால் ஒட்டுமொத்த நாட்டையும் எளிதாகக் கைப்பற்ற முடியும் என ரஷ்யா கைப்பற்றுவதால், கடந்த சில வாரங்களாகவே கீவ் நகருக்கு வெளியே போர் தீவிரமைடந்துள்ளது. சுமார் 64 கிமீ நீளமுள்ள ரஷ்யப் படைகள் கீவ் நகரை முற்றுகையிடும் சாட்டிலைட் படங்களும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஸ்தமித்த ரஷ்ய ராணுவம்
இந்நிலையில். அந்த 64 கிமீ நீளமுள்ள ரஷ்ய ராணுவ கான்வாய், கீவ் நகரை நோக்கி முன்னேற முடியாமல் பாதியிலேயே ஸ்தம்பித்துள்ளதாகக் கிழக்கு ஐரோப்பாவின் நெக்ஸ்டா (NEXTA) தெரிவித்துள்ளது. கீவ் நகரை நோக்கிச் சென்ற பீரங்கிகள் உள்ளிட்ட உக்ரைன் ராணுவ வாகனங்கள் ஒரே இடத்தில் சிக்கி நின்று கொண்டிருக்கிறது. ரஷ்ய வாகனங்கள் சேற்றில் சிக்கி இருக்கலாம் என்றும் அதில் இருந்து தப்ப அனைத்து எரிபொருளையும் உபயோகித்து, இப்போது பின்வாங்கவும் முடியாமல் அதே இடத்தில் சிக்கிக் கொண்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

நகர முடியவில்லை
போரை ஆரம்பித்த சில நாட்களிலேயே ரஷ்யாவின் இந்த மாபெரும் போர் கான்வாய், உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கிப் புறப்பட்டது. அங்கு தற்போது இருக்கும் ஜெலன்ஸ்கி தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு. ரஷ்ய ஆதரவு டம்மி அரசை நிறுவுவதாக அவர்கள் திட்டமாக இருந்தது. இதற்காக பெலாரஸ் எல்லையில் இருந்து வடக்கே உள்ள சாலை வழியாக கீவ் நோக்கி புறப்பட்டது. இந்த ராணுவ வாகனங்கள் தான் இப்போது நகர முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.
Recommended Video

அமெரிக்கா தகவல்
உக்ரைன் போரில் சுமார் 95 சதவீத ரஷ்யப் படைகளை புதின் களமிறங்கி உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய ராணுவத்தால் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற முடியவில்லை என்றும் அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் போர் தீவிரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications