"திசைமாறிய ஏவுகணை.." போலந்தில் பகீர்.! ரஷ்யாவுக்கு ஏன் இந்த வேலை .. சில நொடிகளில் பதறிய உலக நாடுகள்
வார்சா: ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது ரஷ்யா அனுப்பிய ஏவுகணை போலந்து நாட்டிலும் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தற்போது முடிவதாகத் தெரியவில்லை. இந்த போர் ஒரு பக்கம் தொடர ரஷ்யா மற்ற நாடுகளிடமும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தச் சூழலில் ரஷ்யா ஏவுகணை ஒன்று திடீரென போலந்து நாட்டில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது.. போலந்து ராணுவம் இதற்கு எப்படிப் பதிலளித்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தாக்குதல்: மேற்கு உக்ரைனை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை ஒன்றை அனுப்பியது. இருப்பினும் அது எதிர்பாராத விதமாக போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 40 நொடிகள் அந்த ஏவுகணை போலந்து வான்வெளியில் இருந்துள்ளது. அதை போலந்து ராணுவம் உறுதி செய்துள்ளது.
அந்த ஏவுகணை போலந்து வான்வெளி வழியாக ஓசர்டோவ் கிராமத்திற்கு மேலே பறந்து பறந்ததாக போலந்து தெரிவித்துள்ளது. அந்த ஏவுகணை முழுக்க முழுக்க ராணுவ ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டதாக போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் பகுதியில் என்ன நிலைமை என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலந்து வான்வெளியின் பாதுகாப்பை உறுதி எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் போலந்து தெரிவித்துள்ளது.
முதல்முறை இல்லை: ரஷ்யா அனுப்பும் ஏவுகணை தவறுதலாக போலந்து நாட்டிற்குள் நுழைவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2023 டிசம்பர் 29ஆம் தேதி இதேபோலத் தான் உக்ரைனுக்குச் செல்லும் ரஷ்ய ஏவுகணை போலந்து வான்வெளியில் ஊடுருவியது. அப்போது அது பல நிமிடங்கள் அங்கேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2022 நவம்பரில் உக்ரைனில் இருந்து வந்த பாதுகாப்பு எல்லைக்கு அருகில் உள்ள போலந்து கிராமமான ப்ரெஸ்வோடோவ் மீது விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
முதலில் அந்த ஏவுகணை எந்த நாட்டிற்குச் சொந்தமானது எனத் தெரியாமல் இருந்தது. அது ரஷ்ய ஏவுகணையாக இருக்கலாம் எனத் தகவல் வெளியானதால் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. ஏனென்றால் போலந்து நேட்டோ உறுப்பினராக இருப்பதால் இது அடுத்த உலகப் போரைக் கிளப்பும் என்று அஞ்சப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரே அது உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
ஏன் ஆபத்து: சரி அது என்ன நேட்டோ.. போலந்தை தாக்கினால் உலகப் போர் எப்படி வரும் என்ற கேள்வி வரலாம். அதற்கான பதிலைப் பார்க்கலாம். நேட்டோ என்றால் North Atlantic Treaty Organization என்று அர்த்தம்.. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, பிரிட்டன் என்று பலம் வாய்ந்த நாடுகள் வீழ்ந்த நிலையில், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உல நாடுகளாக உருவெடுத்தன.
அப்போது கம்யூனிச கொள்கைகளைப் பின்பற்றிய சோவியத் ஒன்றியம் தனது கொள்கைகளைப் பரப்ப மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சிய மேற்குலக நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கினர். தொடக்கத்தில் இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் என 12 நாடுகள் இருந்த நிலையில், இப்போது அதில் 31 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இருக்கிறது. நேட்டோ ரூல்ஸ்படி ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்குதலை எதிர்கொண்டால் மற்ற நாடுகள் வந்து உதவும்..
அதாவது போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் உதவும். இது உலகப் போருக்குக் கூட வித்திடும் ஆபத்தும் இருக்கிறது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications