புடினை விமர்சித்த தலைவர்.. டீ சாப்பிட்டார்.. கோமாவில் விழுந்தார்.. ரஷ்யாவில் அதிர்ச்சி
மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமிர் புடினை விமர்சித்து வந்தவருமான அலெக்ஸி நாவல்னி நச்சு விஷம் காரணமாக திடீரென கோமாவுக்கு சென்றதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் 44 வயது அலெக்ஸி நாவல்னி. இவருக்கு நச்சு விஷம் ஏற்பட்டதால், திடீரென கோமா நிலைக்கு சென்றதாகவும், தற்போது ஓம்ஸ்க் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்து இருக்கும் செய்தியில், '' அலெக்ஸி நாவல்னி கோமா நிலையில் இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார். அவரது நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவர் டீ மட்டும் குடித்தார். அதில் இருந்து அவருக்கு ஏதாவது விஷம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். விஷம் கலந்த உணவு சூடாக இருக்கும்போது சாப்பிட்டால், உடனடியாக விஷம் உடலில் ஏறிவிடும் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது வென்டிலேட்டரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டோம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது, அலெக்ஸிக்கு இந்த நச்சு விஷம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானத்தை ஓம்ஸ்க் நகரில் இறக்கி, மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டார். ஸ்டெச்சரில் எடுத்து செல்வதற்கு முன்பு பயங்கரமான வலி இருந்ததாக அலெக்ஸி தெரிவித்துள்ளார். இது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications